விக்ரமின் "கோப்ரா" ஃபர்ஸ்ட் லுக் எப்போது ?

விக்ரம் நடிக்கும் "கோப்ரா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் மே மாதம் 22-ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரமலான் பண்டிகையையொட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அடுத்து சென்னை.. அதன்பின் வட இந்தியா.. ரஜினியின் ‘அண்ணாத்த’ அப்டேட்..!  இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் "கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதி வெளியாகிறது" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் விக்ரம் கட்டுமஸ்தான உடம்புடன் நிற்கிறார். அதில் விக்ரமின் முகம் மட்டும் மறைக்கப்பட்டு இருக்கிறது. அஜய் ஞானமுத்து ஏற்கெனவே "டிமாண்ட்டி காலனி", "இமைக்கா நொடிகள்" போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர். அதனால் கோப்ரா மீது எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? - கொரோனாவால் குழப்பத்தில்  கமிட்டி?  இந்தப் படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

விக்ரமின்

விக்ரம் நடிக்கும் "கோப்ரா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

image

நடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் மே மாதம் 22-ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரமலான் பண்டிகையையொட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அடுத்து சென்னை.. அதன்பின் வட இந்தியா.. ரஜினியின் ‘அண்ணாத்த’ அப்டேட்..! 

image

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் "கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதி வெளியாகிறது" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் விக்ரம் கட்டுமஸ்தான உடம்புடன் நிற்கிறார். அதில் விக்ரமின் முகம் மட்டும் மறைக்கப்பட்டு இருக்கிறது. அஜய் ஞானமுத்து ஏற்கெனவே "டிமாண்ட்டி காலனி", "இமைக்கா நொடிகள்" போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர். அதனால் கோப்ரா மீது எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

image

டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? - கொரோனாவால் குழப்பத்தில்  கமிட்டி? 

இந்தப் படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.