மீன் தொட்டிக்குள் கண்ட பேரண்டாசனம்: உலக சாதனை படைத்த 6ஆம் வகுப்பு மாணவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10வயது மாணவி கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் கண்ட பேரண்டாசனம் செய்து ஆஸ்கர் வேல்டு ரெகார்டு உலக சாதனை செய்து சாதனை படைத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் பகுதியை சேர்ந்த சீன்ராஜ், கண்ணாத்தாள் தம்பதியினரின் 10வயது மகள் யோகவீணா. இவர் கூமாப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, சிறுவயது முதலே யோகாசனம் செய்வதில் பல்வேறு வகையான சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் கண்ணாடி மீன் தொட்டியை மூடிய நிலையில் தொட்டிக்குள் 10 நிமிடம் இருந்து கண்ட பேரண்டாசனம் செய்து அசத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஸ்கர் உலகசாதனை கமிட்டியினர் இவரது சாதனையை பாராட்டி யோகவீணாவுக்கு குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனையாளர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர்.

மீன் தொட்டிக்குள் கண்ட பேரண்டாசனம்: உலக சாதனை படைத்த 6ஆம் வகுப்பு மாணவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10வயது மாணவி கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் கண்ட பேரண்டாசனம் செய்து ஆஸ்கர் வேல்டு ரெகார்டு உலக சாதனை செய்து சாதனை படைத்துள்ளார்.

image


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் பகுதியை சேர்ந்த சீன்ராஜ், கண்ணாத்தாள் தம்பதியினரின் 10வயது மகள் யோகவீணா. இவர் கூமாப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, சிறுவயது முதலே யோகாசனம் செய்வதில் பல்வேறு வகையான சாதனைகளை படைத்துள்ளார்.

image


இந்நிலையில் கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் கண்ணாடி மீன் தொட்டியை மூடிய நிலையில் தொட்டிக்குள் 10 நிமிடம் இருந்து கண்ட பேரண்டாசனம் செய்து அசத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஸ்கர் உலகசாதனை கமிட்டியினர் இவரது சாதனையை பாராட்டி யோகவீணாவுக்கு குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனையாளர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர்.