சாந்தனு பாக்யராஜ் - விக்ரம் சுகுமாரனின் ‘இராவணகோட்டம்’ படப்பிடிப்பு நிறைவு

சாந்தனு பாக்யராஜின் ‘இராவணகோட்டம்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு நடிகர் சாந்தனு பாக்யராஜ் ‘இராவணகோட்டம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை, ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார்.  கண்ணன் ரவி தயாரித்துள்ளார். சாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபு, இளவரசு, குக் வித் கோமாளி தீபா, அருள்தாஸ், சுஜாதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசும்போது, ’இராவணகோட்டம்’ திரைப்படத்தின் இந்த பயணம் மனதிற்கு மிக நெருக்கமானதும், பிரத்யேகமானதுமாகும். மற்ற அனைத்து படங்கள் போலவே, இந்த பொது முடக்க காலத்தில், இப்படத்தின் படப்பிடிப்பும் பல தடைகளை சந்தித்தது. தற்போது படத்தின் அனைத்து படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்தது. படக்குழுவின் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. தான் உறுதியளித்தபடி சரியாக திட்டமிட்டு, படப்பிடிப்பை முடித்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். ’இராவணகோட்டம்’ திரைப்படம் சாந்தனு பாக்யராஜ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை திரைப்படமாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களும் தன் நடிகரை புகழ்வது போல் இதை நான் கூறவில்லை. படத்தில் சாந்தனு நடித்திருந்த காட்சிகளை பார்த்துவிட்டே, இதனை கூறுகிறேன். விரைவில் படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளும் முடிக்கப்படவுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ, இசை, உலக திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்” என்றார்.

சாந்தனு பாக்யராஜ் - விக்ரம் சுகுமாரனின் ‘இராவணகோட்டம்’ படப்பிடிப்பு நிறைவு
Web Designing Company in Coimbatore - Creativepoint

சாந்தனு பாக்யராஜின் ‘இராவணகோட்டம்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு நடிகர் சாந்தனு பாக்யராஜ் ‘இராவணகோட்டம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை, ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார்.  கண்ணன் ரவி தயாரித்துள்ளார். சாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபு, இளவரசு, குக் வித் கோமாளி தீபா, அருள்தாஸ், சுஜாதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

image

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசும்போது, ’இராவணகோட்டம்’ திரைப்படத்தின் இந்த பயணம் மனதிற்கு மிக நெருக்கமானதும், பிரத்யேகமானதுமாகும். மற்ற அனைத்து படங்கள் போலவே, இந்த பொது முடக்க காலத்தில், இப்படத்தின் படப்பிடிப்பும் பல தடைகளை சந்தித்தது. தற்போது படத்தின் அனைத்து படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்தது. படக்குழுவின் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. தான் உறுதியளித்தபடி சரியாக திட்டமிட்டு, படப்பிடிப்பை முடித்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

image

’இராவணகோட்டம்’ திரைப்படம் சாந்தனு பாக்யராஜ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை திரைப்படமாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களும் தன் நடிகரை புகழ்வது போல் இதை நான் கூறவில்லை. படத்தில் சாந்தனு நடித்திருந்த காட்சிகளை பார்த்துவிட்டே, இதனை கூறுகிறேன்.

image

விரைவில் படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளும் முடிக்கப்படவுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ, இசை, உலக திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்” என்றார்.