ஒமைக்ரான் பரவல்: திட்டமிட்டபடி தென்னாப்ரிக்கா செல்லும் இந்திய அணி

தென்னாப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் மட்டுமே திட்டமிட்ட தேதிகளில் விளையாடும் எனவும், இருபது ஓவர் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெய்ஷர தெரிவித்துள்ளார். நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா, வரும் 9 ஆம் தேதி தென்னாப்ரிக்கா செல்லவுள்ளது. முன்னதாக தலா 3 டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள், அதனை தொடர்ந்து 4 டி-20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால், தென்னாப்ரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா திட்டமிட்டபடி விளையாடும் எனவும், இருபது ஓவர் தொடரை மட்டும் இந்திய அணி வேறு தேதிகளில் விளையாடும் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷர தெரிவித்துள்ளார். இந்திய A அணியினர் திட்டமிட்டபடி தென்னாப்ரிக்காவில் 4 நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒமைக்ரான் பரவல்: திட்டமிட்டபடி தென்னாப்ரிக்கா செல்லும் இந்திய அணி
Web Designing Company in Coimbatore - Creativepoint

தென்னாப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் மட்டுமே திட்டமிட்ட தேதிகளில் விளையாடும் எனவும், இருபது ஓவர் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெய்ஷர தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா, வரும் 9 ஆம் தேதி தென்னாப்ரிக்கா செல்லவுள்ளது. முன்னதாக தலா 3 டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள், அதனை தொடர்ந்து 4 டி-20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால், தென்னாப்ரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

image

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா திட்டமிட்டபடி விளையாடும் எனவும், இருபது ஓவர் தொடரை மட்டும் இந்திய அணி வேறு தேதிகளில் விளையாடும் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷர தெரிவித்துள்ளார். இந்திய A அணியினர் திட்டமிட்டபடி தென்னாப்ரிக்காவில் 4 நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.