பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! கல்லூரி மாணவியர் உறுதிமொழி!

Plastic bags are everywhere in our environment. Plastic bags are indisputably bad for the environment. plastic shopping bags litter our environment, harm wildlife and require valuable resources to manufacture.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! கல்லூரி மாணவியர் உறுதிமொழி!
Ban Plastic bag

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மாணவியர்களுக்கு நாட்டு நலப்பணி திட்டத்தில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கிரீன் அவர் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி அனிதா ஒற்றை உபயோக பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், சூழல் கேடுகள் குறித்து மாணவிகளிடையே பேசினார். தட்பவெப்பம், பருவநிலை, காற்று, மண், நீர் ஆகியவற்றில் ஏட்பட்டுள்ள பாதிப்புகள், நம் புவியை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை எடுத்துரைத்து, நாம் ஏன் உடனடியாக பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்றுக்கள் உபயோகிக்க பழக வேண்டும் என்பதை விளக்கினார். தொடர்ந்து, மாணவிகள், பசுமை சமூக பொறுப்புக்கான தங்களது பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் பின்வரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

1. கடைகளுக்கு செல்லும்போது கட்டாயம் துணிப்பை எடுத்து செல்வேன்.
2. ஒற்றை உபயோக பிளாஸ்டிக்குக்கு எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் மறுப்பு தெரிவிப்பேன்.
3. மறுஉபயோக டம்ளர்கள், தட்டுகள், மற்றும் பாட்டில்கள் மட்டுமே பயன்படுத்துவேன்.
4. பிளாஸ்டிக் கழிவுகளை சரியான முறையில் கழிப்பேன்.
5. வருங்கால தலைமுறையினர், பசுமையான, ஆரோக்கியமான பூமியில் வாழ எனது பொறுப்புகளை சரியாக கடைபிடிப்பேன்.