இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்...!

ஒரு லட்சம் கொரோனா உயிரிழப்புகளைப் பதிவு செய்த மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு லட்சத்து 842 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஒரு லட்சம் கொரோனா உயிரிழப்புகளைப் பதிவு செய்த மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. நேற்று புதிதாக 1,076 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,73,544 ஆக உயர்ந்துள்ளது. இதில் 54,27,706 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளார்கள். 9,44,996 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்...!

ஒரு லட்சம் கொரோனா உயிரிழப்புகளைப் பதிவு செய்த மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு லட்சத்து 842 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஒரு லட்சம் கொரோனா உயிரிழப்புகளைப் பதிவு செய்த மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. நேற்று புதிதாக 1,076 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

image

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,73,544 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 54,27,706 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளார்கள். 9,44,996 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.