சென்னை வந்தடைந்தேன்! - தமிழில் ட்விட் செய்த அமித் ஷா

தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே என்று தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதியம் ஒரு மணி 49 நிமிடத்திற்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர். தொடர்ந்து சாலையில் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்த அமித்ஷா காரை நிறுத்திவிட்டு, சிறிது தூரம் நடந்து சென்றார். அதன்பின் கிண்டி, அடையாறு வழியாக அமித்ஷா லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்றடைந்தார். இதனிடையே 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித் ஷா இன்று மாலை நடைபெறவிருக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், ‘சென்னை வந்தடைந்தேன்’ என்று அமித்ஷா தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழில் ட்விட் செய்துள்ள அமித் ஷா, “தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் அமித் ஷா Live Updates இங்கே > https://bit.ly/3pIGdq1

சென்னை வந்தடைந்தேன்! - தமிழில் ட்விட் செய்த அமித் ஷா

தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே என்று தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதியம் ஒரு மணி 49 நிமிடத்திற்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர்.

தொடர்ந்து சாலையில் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்த அமித்ஷா காரை நிறுத்திவிட்டு, சிறிது தூரம் நடந்து சென்றார். அதன்பின் கிண்டி, அடையாறு வழியாக அமித்ஷா லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்றடைந்தார். இதனிடையே 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித் ஷா இன்று மாலை நடைபெறவிருக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், ‘சென்னை வந்தடைந்தேன்’ என்று அமித்ஷா தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழில் ட்விட் செய்துள்ள அமித் ஷா, “தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.