புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ. சங்கர் திடீர் மரணம்

புதுச்சேரி சட்டப்பேரவை நியமன எம்.எல்.ஏ.வான பாஜகவை சேர்ந்த சங்கர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 70. சங்கர் மறைவால் புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 2 ஆக குறைந்தது. நேற்று இரவு வரை கட்சி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சங்கர், இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சங்கரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பிருந்தாவனம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ. சங்கர் திடீர் மரணம்

புதுச்சேரி சட்டப்பேரவை நியமன எம்.எல்.ஏ.வான பாஜகவை சேர்ந்த சங்கர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 70.

சங்கர் மறைவால் புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 2 ஆக குறைந்தது. நேற்று இரவு வரை கட்சி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சங்கர், இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சங்கரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பிருந்தாவனம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.