சென்னை அணியில் புஜாரா...வா??? - ஷாக் ஆன சிஎஸ்கே ரசிகர்கள்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அஸ்திவாரமான சட்டேஸ்வர் புஜாராவை சென்னையில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலத்தில் பிக் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சர்வதேச அளவிலான ஷார்ட்டார் பார்மெட் கிரிக்கெட்டில் புஜாரா விளையாடி கிட்டத்தட்ட  7 ஆண்டுகள் கடந்ததுள்ள நிலையில் டி20 கிரிக்கெட் விளையாட அவரை பிக் செய்துள்ளது சென்னை அணி என்பதும் குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்களுக்காக கடந்த 2008 முதல் 2014 வரை புஜாரா விளையாடியுள்ளார். அதன் மூலம் மொத்தம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்களை அவர் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் 99.74. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி மூலமாக ஐபிஎல் களத்திற்கு புஜாரா கம்பேக் கொடுத்துள்ளார். We welcome the legend, Che #Bujji with a super cute applause from the auction hall! #WhistlePodu #SuperAuction ?? pic.twitter.com/6RdJkKBy5O — Chennai Super Kings (@ChennaiIPL) February 18, 2021 புஜாராவை 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை அணி. புஜாரா டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் என்ற நிலையில் அவரை சென்னை பிக் செய்து சர்பிரைஸ் கொடுத்துள்ளது. அவர் மட்டுமல்லாது மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்ப கவுதமையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாராவை ஏன் சென்னை அணி எடுத்துள்ளது கேதர் ஜாதவ் இடத்தை நிரப்பவா என்று சிலரும் புஜாரா திறமையை சரியா பயன்படுத்தி மீண்டும் தன்னை ஒரு சிறந்த தலைவன் என நிருபித்து காட்டுவார் தோனி என்று சிலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

சென்னை அணியில் புஜாரா...வா??? - ஷாக் ஆன சிஎஸ்கே ரசிகர்கள்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அஸ்திவாரமான சட்டேஸ்வர் புஜாராவை சென்னையில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலத்தில் பிக் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சர்வதேச அளவிலான ஷார்ட்டார் பார்மெட் கிரிக்கெட்டில் புஜாரா விளையாடி கிட்டத்தட்ட  7 ஆண்டுகள் கடந்ததுள்ள நிலையில் டி20 கிரிக்கெட் விளையாட அவரை பிக் செய்துள்ளது சென்னை அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்களுக்காக கடந்த 2008 முதல் 2014 வரை புஜாரா விளையாடியுள்ளார். அதன் மூலம் மொத்தம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்களை அவர் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் 99.74. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி மூலமாக ஐபிஎல் களத்திற்கு புஜாரா கம்பேக் கொடுத்துள்ளார்.

புஜாராவை 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை அணி. புஜாரா டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் என்ற நிலையில் அவரை சென்னை பிக் செய்து சர்பிரைஸ் கொடுத்துள்ளது. அவர் மட்டுமல்லாது மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்ப கவுதமையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாராவை ஏன் சென்னை அணி எடுத்துள்ளது கேதர் ஜாதவ் இடத்தை நிரப்பவா என்று சிலரும் புஜாரா திறமையை சரியா பயன்படுத்தி மீண்டும் தன்னை ஒரு சிறந்த தலைவன் என நிருபித்து காட்டுவார் தோனி என்று சிலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.