’’கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது’’ - WHO தலைவர்

தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுப்பதற்கு போதுமானதாக இருக்காது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றால் இதுவரை 54 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி இன்று பேசிய உலக சுகாதார இயக்குநர், ‘’தடுப்பூசி என்பது தற்போதுள்ள மருந்துகளை பூர்த்தி செய்வதற்குதான் தவிர, அவற்றுக்கு மாற்றாக அல்ல’’ என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தடுப்பூசி மட்டுமே கொரோனாவைத் தடுக்க போதுமானதாகாது என்றும் கூறியுள்ளார். தடுப்பூசி முதலில் சில கட்டுப்பாடுகளுடன்தான் பயன்பாட்டிற்கு வரும். முதலில் சுகாதார ஊழியர்கள், வயதானோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் பாதிப்பும் இறப்பு விகிதமும் குறையும். என டெட்ராஸ் கூறியுள்ளார். அதேசமயம், இதுவே கொரோனா பரவுவதற்கும் வாய்ப்பாக அமையும். எனவே இன்னும் கொரோனா சோதனைகள் தொடரவேண்டும், தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவையும் அவசியம் என்று எச்சரித்துள்ளார். WHOவின் சனிக்கிழமை அறிக்கைப்படி, 660905 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இதற்கு முந்தைய நாட்களைவிட அதிகமானது என யு.என் ஹெல்த் ஏஜென்சி கூறியுள்ளது.  

’’கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது’’ - WHO தலைவர்

தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுப்பதற்கு போதுமானதாக இருக்காது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் இதுவரை 54 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி இன்று பேசிய உலக சுகாதார இயக்குநர், ‘’தடுப்பூசி என்பது தற்போதுள்ள மருந்துகளை பூர்த்தி செய்வதற்குதான் தவிர, அவற்றுக்கு மாற்றாக அல்ல’’ என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தடுப்பூசி மட்டுமே கொரோனாவைத் தடுக்க போதுமானதாகாது என்றும் கூறியுள்ளார்.

image

தடுப்பூசி முதலில் சில கட்டுப்பாடுகளுடன்தான் பயன்பாட்டிற்கு வரும். முதலில் சுகாதார ஊழியர்கள், வயதானோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் பாதிப்பும் இறப்பு விகிதமும் குறையும். என டெட்ராஸ் கூறியுள்ளார்.

அதேசமயம், இதுவே கொரோனா பரவுவதற்கும் வாய்ப்பாக அமையும். எனவே இன்னும் கொரோனா சோதனைகள் தொடரவேண்டும், தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவையும் அவசியம் என்று எச்சரித்துள்ளார்.

WHOவின் சனிக்கிழமை அறிக்கைப்படி, 660905 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இதற்கு முந்தைய நாட்களைவிட அதிகமானது என யு.என் ஹெல்த் ஏஜென்சி கூறியுள்ளது.