டெல்லியில் இருந்து கோவை திரும்பிய 82 பேருக்கு கொரோனா அறிகுறி!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோவை திரும்பிய 82 பேரில் பெரும்பாலானோருக்கு கொரோனா அறிகுறி இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்

டெல்லியில் இருந்து கோவை திரும்பிய 82 பேருக்கு கொரோனா அறிகுறி!
மாவட்ட ஆட்சியர் ராசாமணி

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோவை திரும்பிய 82 பேரில் பெரும்பாலானோருக்கு கொரோனா அறிகுறி இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 21 முதல் 24ஆம் தேதி வரை டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கோவை, மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி, அன்னூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 82 பேர்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த நபர்களும், அந்த மாநாட்டை முடித்துக் கொண்டு கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்தபோது அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லி மாநாட்டில் பங்கேற்ற கோவையை சேர்ந்த 82 பேரை மாவட்ட நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது.


அந்த 82 பேரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது. இதில், பெரும்பாலோனோருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிய வந்திருப்பதாகவும், அவர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனையில் இருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-corona-symptoms-for-82-persons-who-returned-from-delhi-meeting-in-coimbatore-vaiju-273499.html