’’முகக்கவசம் கட்டாயம்’’ - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது என்பதை சுட்டிக்காட்டி, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும்பொழுது தவறாமல் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். கொரோனாதொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

’’முகக்கவசம் கட்டாயம்’’ - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
Web Designing Company in Coimbatore - Creativepoint

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது என்பதை சுட்டிக்காட்டி, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

image

வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்.

image

ஒவ்வொரு தனிநபரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும்பொழுது தவறாமல் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். கொரோனாதொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.