டெஸ்டில் அதிக விக்கெட்: ஹர்பஜனை பின்னுக்கு தள்ளி புதிய மைல்கல்லை எட்டிய அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தலான ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இதுவரை இந்திய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 3 பவுலர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் அஸ்வின். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், 417 விக்கெட்டுகள் வீழ்த்தி டாப் 3-வது இடத்தில் இருந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஹர்பஜனை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு 418 விக்கெட்டுகளுடன் முன்னேறியுள்ளார்.  கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பலரும் அஷ்வினின் இந்த புதிய மைல் கல்லை பாராட்டி வருகின்றனர்.

டெஸ்டில் அதிக விக்கெட்: ஹர்பஜனை பின்னுக்கு தள்ளி புதிய மைல்கல்லை எட்டிய அஸ்வின்
Web Designing Company in Coimbatore - Creativepoint

இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தலான ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இதுவரை இந்திய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 3 பவுலர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் அஸ்வின்.

image

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், 417 விக்கெட்டுகள் வீழ்த்தி டாப் 3-வது இடத்தில் இருந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஹர்பஜனை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு 418 விக்கெட்டுகளுடன் முன்னேறியுள்ளார். 

கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பலரும் அஷ்வினின் இந்த புதிய மைல் கல்லை பாராட்டி வருகின்றனர்.