வீட்டை விட்டு ‘கெட்-அவுட்’ சொன்ன விஷ்ணுவின் தந்தை? - கண்ணீருடன் வெளியே வந்த நடிகர் சூரி?

நிலம் வாங்கிய பணத்தை திருப்பி கேட்ட நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகர் சூரி, வீரதீர சூரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த படத்தின் தயாரிப்பாளரான அன்புவேல்ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணுவின் தந்தை ரமேஷ் ஆகியோர் அவருக்கு இடம் வாங்கித்தருவதாக கூறியதாக தெரிகிறது. இதற்காக அவர்கள் 2 கோடிக்கு மேல் பணத்தை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சூரி தனது புகாரில் “அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணுவின் தந்தை ரமேஷ் ஆகியோர் சென்னையை அடுத்த சிறுசேரியில் 1.83 ஏக்கரில் நிலம் வாங்கி தந்தார்கள். ஆனால் அதற்கு நடைபாதை இல்லை. நடைபாதை இல்லாத நிலத்தை எனக்கு வாங்கி கொடுத்துள்ளார்கள். நடைபாதையை பெற்றுத்தர முடியாததால் பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்தனர். ஆனால் பணத்தை திருப்பி தருவதாக கூறி கடந்த 5 ஆண்டுகளாக என்னை அலைக்கழித்து வருகின்றனர். பணத்தை அன்புவேல் ராஜனிடம் கேட்டபோது பணம் வேண்டுமா? அல்லது உயிருடன் இருக்க வேண்டுமா? நீ எங்கிருந்து பேசிக்கொண்டிருக்கிறாய். உன் மனைவி பிள்ளைகள் எங்கிருக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும் என மிரட்டும் தொனியில் பேசினார். இதுகுறித்து ரமேஷிடம் கூறியபோது உங்களின் பிரச்னையை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் என கைகழுவி விட்டார்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே பணத்தை கேட்டபோது விஷ்ணுவின் தந்தை ரமேஷ் குடவாலா வீட்டை விட்டு ‘கெட்-அவுட்’ எனக் கூறி விரட்டியதாகவும் இதனால் சூரி அழுதுகொண்டே வெளியே வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகே சட்ட நடவடிக்கையில் சூரி இறங்கியதாக தெரிகிறது.

வீட்டை விட்டு ‘கெட்-அவுட்’ சொன்ன விஷ்ணுவின் தந்தை? - கண்ணீருடன் வெளியே வந்த நடிகர் சூரி?

நிலம் வாங்கிய பணத்தை திருப்பி கேட்ட நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகர் சூரி, வீரதீர சூரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த படத்தின் தயாரிப்பாளரான அன்புவேல்ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணுவின் தந்தை ரமேஷ் ஆகியோர் அவருக்கு இடம் வாங்கித்தருவதாக கூறியதாக தெரிகிறது. இதற்காக அவர்கள் 2 கோடிக்கு மேல் பணத்தை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

சூரியின் பொய்யான குற்றச்சாட்டு வருத்தமளிக்கிறது”... நில மோசடி புகார்  குறித்து விஷ்ணு விஷால் விளக்கம்...! | Vishnu vishal Explain about comedy  actor soori Complaint

இந்நிலையில் சூரி தனது புகாரில் “அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணுவின் தந்தை ரமேஷ் ஆகியோர் சென்னையை அடுத்த சிறுசேரியில் 1.83 ஏக்கரில் நிலம் வாங்கி தந்தார்கள். ஆனால் அதற்கு நடைபாதை இல்லை. நடைபாதை இல்லாத நிலத்தை எனக்கு வாங்கி கொடுத்துள்ளார்கள். நடைபாதையை பெற்றுத்தர முடியாததால் பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்தனர்.

image

ஆனால் பணத்தை திருப்பி தருவதாக கூறி கடந்த 5 ஆண்டுகளாக என்னை அலைக்கழித்து வருகின்றனர். பணத்தை அன்புவேல் ராஜனிடம் கேட்டபோது பணம் வேண்டுமா? அல்லது உயிருடன் இருக்க வேண்டுமா? நீ எங்கிருந்து பேசிக்கொண்டிருக்கிறாய். உன் மனைவி பிள்ளைகள் எங்கிருக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும் என மிரட்டும் தொனியில் பேசினார்.

பண மோசடி செய்ததாக சூரி அளித்த புகாரில் திருப்பம்: நடிகர் விஷ்ணு விஷால்  திட்டவட்ட மறுப்பு….!! - Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News Online | Latest ...

இதுகுறித்து ரமேஷிடம் கூறியபோது உங்களின் பிரச்னையை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் என கைகழுவி விட்டார்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே பணத்தை கேட்டபோது விஷ்ணுவின் தந்தை ரமேஷ் குடவாலா வீட்டை விட்டு ‘கெட்-அவுட்’ எனக் கூறி விரட்டியதாகவும் இதனால் சூரி அழுதுகொண்டே வெளியே வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகே சட்ட நடவடிக்கையில் சூரி இறங்கியதாக தெரிகிறது.