சென்னை: சசிகலாவுடன் தினகரன் திடீர் சந்திப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒருமணி நேரம் வரை நீடித்தது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுபற்றி டிடிவி தினகரனும் சசிகலாவும் விவாதித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. அமமுகவின் தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த நீலாங்கரை எம்.சி.முனுசாமி பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இவை உள்ளிட்ட அமமுக உள்கட்சி விவகாரம் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: சசிகலாவுடன் தினகரன் திடீர் சந்திப்பு
Web Designing Company in Coimbatore - Creativepoint

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒருமணி நேரம் வரை நீடித்தது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுபற்றி டிடிவி தினகரனும் சசிகலாவும் விவாதித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

image

அமமுகவின் தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த நீலாங்கரை எம்.சி.முனுசாமி பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இவை உள்ளிட்ட அமமுக உள்கட்சி விவகாரம் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.