மதுரை: ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய நடிகர் சூரி

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் நடிகர் பரோட்டா சூரி பொங்கல் விழாவை கொண்டாடினார். மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஜோ ஆண்டிரியா தனியார் குழந்தைகள் இல்லத்தில் தங்கி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் நடிகர் சூரி பொங்கல் விழாவை கொண்டாடினார். மேலும் குழந்தைகளுடன் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தி குழந்தைகளை மகிழ்ச்சி படுத்தினார். இதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு நோட்டுகள், ஸ்கூல் பேக், ஸ்கெட்ச், வாட்டர் கேன் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை வழங்கியதோடு, குழந்தைகளுக்கு உணவும் வழங்கப்பட்டது. மேலும் நடிகர் சூரி குழந்தைகளிடம் பேசும்போது அனைவரும் நன்றாக படித்து தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும், கல்வி மட்டுமே நம்மிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாத ஒரு சொத்து என்று அறிவுரை கூறினார்.

மதுரை: ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய நடிகர் சூரி

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் நடிகர் பரோட்டா சூரி பொங்கல் விழாவை கொண்டாடினார்.


மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஜோ ஆண்டிரியா தனியார் குழந்தைகள் இல்லத்தில் தங்கி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் நடிகர் சூரி பொங்கல் விழாவை கொண்டாடினார். மேலும் குழந்தைகளுடன் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தி குழந்தைகளை மகிழ்ச்சி படுத்தினார்.

image


இதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு நோட்டுகள், ஸ்கூல் பேக், ஸ்கெட்ச், வாட்டர் கேன் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை வழங்கியதோடு, குழந்தைகளுக்கு உணவும் வழங்கப்பட்டது. மேலும் நடிகர் சூரி குழந்தைகளிடம் பேசும்போது அனைவரும் நன்றாக படித்து தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும், கல்வி மட்டுமே நம்மிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாத ஒரு சொத்து என்று அறிவுரை கூறினார்.