மம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

இந்தப் படம் மம்தாவின் வாழ்க்கை வரலாறு அல்ல, சாதாரண பெண் ஒருவர் எப்படி போராடி முதலமைச்சர் ஆகிறார் என்பதை மட்டுமே குறிக்கிறது’

மம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை பற்றிய திரைப்படமான பாகினி-க்கு தடை விதிக்க பாஜக கோரியதை அடுத்து, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

மேற்கு வங்க இயக்குனர் நேகல் தத்தா இயக்கியுள்ள படம், ’பாகினி: பெங்கால் டைகரஸ்’. மேற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசியலில் முன்னேறி முதலமைச்சர் ஆனது வரையிலான கதையை கொண்ட இந்த படத்தை பிங்கி பால்மண்டல் தயாரித்துள்ளார். நாடக நடிகை ரூமா சக்கரவர்த்தி, மம்தாவாக நடித்திருக்கிறார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படம் மே 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டை தேர்தல் முடியும் வரை தள்ளி வைக்க வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக, தேர்தல் ஆணையத் தில் மனு கொடுத்தது. ஆனால், ’’இந்தப் படம் மம்தாவின் வாழ்க்கை வரலாறு அல்ல, சாதாரண பெண் ஒருவர் எப்படி போராடி முதலமைச்சர் ஆகிறார் என்பதை மட்டுமே குறிக்கிறது’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் நேகல் தத்தா. 

இந்நிலையில் மத்திய தேர்தல் ஆணையம், இந்தப் படம் பற்றி மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.