ஓசூர் : லாரி மோதி காயமடைந்த யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சரக்கு பெட்டக லாரி மோதியதில் படுகாயம் அடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஓசூர் அருகேயுள்ள பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி மோதியது, இதில் யானை படுகாயமடைந்தது. இந்த விபத்தால் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், கிரேன் மூலம் யானையைத் தூக்கி லாரியில் வைத்து அய்யூருக்குக் கொண்டு சென்றனர். அங்கு சாம ஏரிக்குக் கொண்டுசென்ற வனத்துறையினர், யானைக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். பெங்களூரு பன்னாகட்டா வன உயிரியல் பூங்கா மருத்துவர் குழுவினர் வந்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், யானையின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதனால் நிற்கமுடியாத சூழல் ஏற்பட்டது. யானையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், சிகிச்சைபலனின்றி யானை உயிரிழந்தது. சரக்குப் பெட்டக லாரியின் ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சோலைமுத்துவை காவல்துறையினர் கைது செய்தனா்.  

ஓசூர் : லாரி மோதி காயமடைந்த யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சரக்கு பெட்டக லாரி மோதியதில் படுகாயம் அடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஓசூர் அருகேயுள்ள பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி மோதியது, இதில் யானை படுகாயமடைந்தது. இந்த விபத்தால் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், கிரேன் மூலம் யானையைத் தூக்கி லாரியில் வைத்து அய்யூருக்குக் கொண்டு சென்றனர். அங்கு சாம ஏரிக்குக் கொண்டுசென்ற வனத்துறையினர், யானைக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தனர்.

image

பெங்களூரு பன்னாகட்டா வன உயிரியல் பூங்கா மருத்துவர் குழுவினர் வந்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், யானையின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதனால் நிற்கமுடியாத சூழல் ஏற்பட்டது. யானையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், சிகிச்சைபலனின்றி யானை உயிரிழந்தது. சரக்குப் பெட்டக லாரியின் ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சோலைமுத்துவை காவல்துறையினர் கைது செய்தனா்.