''சி யூ ஸூன் திரைப்படத்தின் தொடர்ச்சி.....'' - பகத் பாசில் வெளியிட்ட ரகசியம்

சி யூ ஸூன் திரைப்படம் குறித்து நடிகர் பகத் DNA இணையதளத்திற்கு பிரத்யேகமாக பேசியுள்ளார். மலையாள நடிகர் பகத் பாசில் நடிப்பில், தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சி யூ ஸூன். த்ரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப்படத்தை டேக் ஆஃப் திரைப்படத்தை உருவாக்கிய மகேஷ் இயக்கியுள்ளார். வெளிப்புற படிப்பிடிப்புகள் ஏதும் இல்லாத ஊரடங்கு காலத்தில் வெளியே செல்லாமல் செல்போன் கேமரா மூலமே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் உருவாக்கத்தை காண ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் உள்ளனர். சர்ச்சிங் என்ற ஆங்கில திரைப்படம் போல இணையம், வீடியோ கால் என தொழில்நுட்ப உதவியுடன் இந்த படம் நகரும் என ட்ரைலர் மூலமே தெரிகிறது. இந்நிலையில் சி யூ ஸூன் திரைப்படம் குறித்து நடிகர் பகத் DNA இணையதளத்திற்கு பிரத்யேகமாக பேசியுள்ளார். அதில் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியில், ''கேரளா, யூஏஇ என இருவேறப்பட்ட இடங்களை சுற்றி படம் நகரும். ஆனால் படம் முழுக்க கொச்சியில் படமாக்கப்பட்டது. சி யூ ஸூன் திரைப்படத்தின் தொடர்ச்சி அடுத்த வருடம் வெளியாகும். அது இந்தப்படம் போல வித்தியாசமாக இருக்காது. வழக்கமான திரைப்படமாக வெளிப்புறங்களில் படப்பிடிப்பு செய்யப்படும். சி யூ ஸூன் திரைப்படத்தை இப்படி மிகவும் கட்டுபாட்டுக்குள் எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. வழக்கமாக எடுக்கவே நினைத்தோம். ஊரடங்கு அதற்கு வழி செய்யவில்லை'' என தெரிவித்துள்ளார் பைக்கும் ஓட்டுவேன், கோலமும் போடுவேன்- மனம் திறக்கும் நடிகை சம்யுக்தா ஹெக்டே

''சி யூ ஸூன் திரைப்படத்தின் தொடர்ச்சி.....'' - பகத் பாசில் வெளியிட்ட ரகசியம்

சி யூ ஸூன் திரைப்படம் குறித்து நடிகர் பகத் DNA இணையதளத்திற்கு பிரத்யேகமாக பேசியுள்ளார்.

மலையாள நடிகர் பகத் பாசில் நடிப்பில், தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சி யூ ஸூன். த்ரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப்படத்தை டேக் ஆஃப் திரைப்படத்தை உருவாக்கிய மகேஷ் இயக்கியுள்ளார். வெளிப்புற படிப்பிடிப்புகள் ஏதும் இல்லாத ஊரடங்கு காலத்தில் வெளியே செல்லாமல் செல்போன் கேமரா மூலமே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

image

இதனால் இந்த படத்தின் உருவாக்கத்தை காண ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் உள்ளனர். சர்ச்சிங் என்ற ஆங்கில திரைப்படம் போல இணையம், வீடியோ கால் என தொழில்நுட்ப உதவியுடன் இந்த படம் நகரும் என ட்ரைலர் மூலமே தெரிகிறது. இந்நிலையில் சி யூ ஸூன் திரைப்படம் குறித்து நடிகர் பகத் DNA இணையதளத்திற்கு பிரத்யேகமாக பேசியுள்ளார்.

image

அதில் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியில், ''கேரளா, யூஏஇ என இருவேறப்பட்ட இடங்களை சுற்றி படம் நகரும். ஆனால் படம் முழுக்க கொச்சியில் படமாக்கப்பட்டது. சி யூ ஸூன் திரைப்படத்தின் தொடர்ச்சி அடுத்த வருடம் வெளியாகும். அது இந்தப்படம் போல வித்தியாசமாக இருக்காது. வழக்கமான திரைப்படமாக வெளிப்புறங்களில் படப்பிடிப்பு செய்யப்படும். சி யூ ஸூன் திரைப்படத்தை இப்படி மிகவும் கட்டுபாட்டுக்குள் எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. வழக்கமாக எடுக்கவே நினைத்தோம். ஊரடங்கு அதற்கு வழி செய்யவில்லை'' என தெரிவித்துள்ளார்

பைக்கும் ஓட்டுவேன், கோலமும் போடுவேன்- மனம் திறக்கும் நடிகை சம்யுக்தா ஹெக்டே