தமிழகத்தில் பி.டி கத்திரிக்காய் கள ஆய்விற்கு அனுமதி: மு.கஸ்டாலின் கண்டனம்.

"மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை” தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் செய்ய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது; முதலமைச்சர்  பழனிசாமி அரசு இதனை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துவிட்டு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைப் பெயரளவுக்குத் பழனிசாமி அரசு உயர்த்தியிருப்பது விவசாயிகளை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது; குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார் இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்“மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை” தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் களப்பரிசோதனை (Field Trial) செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனித குலத்திற்கும் - உயிரினங்களுக்கும் ஆபத்தான பி.டி. கத்தரிக்காய் - நம் மண்ணின் பாரம்பரிய விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி - வேளாண்துறையில் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் அனைத்துத் தரப்பு விவசாயிகளிடமும் நிலவி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, இதுபோன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் திணிப்பது கண்டனத்திற்குரியது.   மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை” பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது, விவசாயிகளின் எதிர்காலம் பற்றியோ அல்லது அவர்களின் நலன் பற்றியே கவலைப்படாத பொறுப்பற்ற போக்கு என்பதை விட, நம்மூர் விவசாயிகளுக்குக் கத்தரிக்காய் விவசாயத்தைக் கூட நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று கூறும் ஆணவப் போக்காகும். சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கத்தையே பாழ்படுத்தும் உள்நோக்கத்துடன், “சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை-2020” வெளியிட்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, வேளாண்மைத்துறையிலும் “மாற்றம் என்ற பெயரில் மகா குழப்பங்களை” ஏற்படுத்தி - விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம். ஆகவே, தமிழ்நாட்டில் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வுக்கு” வழங்கியுள்ள அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். “மாநில அரசும் உரிய அனுமதி வழங்கினால் மட்டுமே இந்தக் கள ஆய்வை மேற்கொள்ள இயலும்” என்பதால் – பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வினை தமிழ்நாட்டில் மேற்கொள்ள எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் - “விவசாயிகளுக்கு எதிரான” இந்தக் கள ஆய்வை முதலமைச்சர் பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் பி.டி கத்திரிக்காய் கள ஆய்விற்கு அனுமதி: மு.கஸ்டாலின் கண்டனம்.

"மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை” தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் செய்ய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது; முதலமைச்சர்  பழனிசாமி அரசு இதனை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

image

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துவிட்டு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைப் பெயரளவுக்குத் பழனிசாமி அரசு உயர்த்தியிருப்பது விவசாயிகளை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது; குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார் இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்“மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை” தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் களப்பரிசோதனை (Field Trial) செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித குலத்திற்கும் - உயிரினங்களுக்கும் ஆபத்தான பி.டி. கத்தரிக்காய் - நம் மண்ணின் பாரம்பரிய விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி - வேளாண்துறையில் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் அனைத்துத் தரப்பு விவசாயிகளிடமும் நிலவி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, இதுபோன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் திணிப்பது கண்டனத்திற்குரியது.

 

image

மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை” பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது, விவசாயிகளின் எதிர்காலம் பற்றியோ அல்லது அவர்களின் நலன் பற்றியே கவலைப்படாத பொறுப்பற்ற போக்கு என்பதை விட, நம்மூர் விவசாயிகளுக்குக் கத்தரிக்காய் விவசாயத்தைக் கூட நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று கூறும் ஆணவப் போக்காகும். சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கத்தையே பாழ்படுத்தும் உள்நோக்கத்துடன், “சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை-2020” வெளியிட்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, வேளாண்மைத்துறையிலும் “மாற்றம் என்ற பெயரில் மகா குழப்பங்களை” ஏற்படுத்தி - விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

ஆகவே, தமிழ்நாட்டில் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வுக்கு” வழங்கியுள்ள அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். “மாநில அரசும் உரிய அனுமதி வழங்கினால் மட்டுமே இந்தக் கள ஆய்வை மேற்கொள்ள இயலும்” என்பதால் – பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வினை தமிழ்நாட்டில் மேற்கொள்ள எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் - “விவசாயிகளுக்கு எதிரான” இந்தக் கள ஆய்வை முதலமைச்சர் பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.