தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் விதிகளுக்கு உட்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் என புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். புதிய ஆளுநராக பதவி ஏற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என்.ரவி, வணக்கம் என தமிழில் கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார். பின்பு பேசிய அவர், “ பழம்பெருமை மிக்க தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைபடுகிறேன். பழமையான தமிழ்மொழியை கற்க விரும்புகிறேன். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. ஆளுநர் பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. தமிழ்நாடு அரசு சிறப்பாக உள்ளது'' என தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி
Web Designing Company in Coimbatore - Creativepoint

ஆளுநர் விதிகளுக்கு உட்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் என புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

புதிய ஆளுநராக பதவி ஏற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என்.ரவி, வணக்கம் என தமிழில் கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார். பின்பு பேசிய அவர், “ பழம்பெருமை மிக்க தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைபடுகிறேன். பழமையான தமிழ்மொழியை கற்க விரும்புகிறேன்.

image

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. ஆளுநர் பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. தமிழ்நாடு அரசு சிறப்பாக உள்ளது'' என தெரிவித்தார்.