படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. விவசாயிகளுக்கான எச்சரிக்கைகளும், அறிவுறுத்தல்களும்..!

Agricultural minister of odisha issued an guidelines for the farmers to use neem seed mixed water for the crops to prevent against the locust attack.

படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. விவசாயிகளுக்கான எச்சரிக்கைகளும், அறிவுறுத்தல்களும்..!

ஒடிசாவில் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க வேப்ப விதைகள் கலந்த தண்ணீரை பயிர்களுக்குத் தெளிக்க வேண்டும் என அம்மாநில வேளாண் துறை அமைச்சர் அருண் சாகோ தெரிவித்துள்ளார்.

கொரோனாவை தொடர்ந்து அடுத்ததாக உலக நாடுகள் சந்தித்திருக்கும் பிரச்னை வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடல் அலைபோல் வரும் இந்த வெட்டுக்கிளிக் கூட்டம் பயிர்களை நாசம் செய்து விடுகிறது.இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னார் ஐநா அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் என எச்சரித்திருந்தது.

அதன்படி ஜெய்பூர், ஒடிசா உள்ளிட்ட பல இடங்களில் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளை கையாள்வது குறித்து ஒடிசா மாநில வேளாண் துறை அமைச்சர் அருண் சாகோ விவசாயிகளுக்கு செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது “ வெட்டுக்கிளிகள் நமது எல்லைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒடிசா வேளாண் கல்லூரி வெளியிட்டுள்ள ஆலோசனைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.

இந்த வெட்டுக்கிளி கூட்டத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேப்ப விதைகளை தண்ணீரில் கலந்து பயிர்களுக்குத் தெளியுங்கள். அப்படி இல்லையென்றால் சந்தையில் கிடைக்கும் வேப்ப விதை கலந்த பூச்சிமருந்துகளை பயிர்களுக்குத் தெளியுங்கள் ” என அவர் கூறியுள்ளார்.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.                                                                                            

Source: http://www.puthiyathalaimurai.com/newsview/70998/Odisha-issues-guidelines-for-farmers-against-locust-attack