நீதிபதிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம்

நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் என குறிப்பிடுவதற்கு பதில், நீதிபதிகள் என தவறாக கூறிவிட்டதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.  நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியபோது ஒரு வார்த்தையைத் தவறாகக் கூறிவிட்டதாக விளக்கம் அளித்துள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ஊழல்வாதிகளுக்கு தாமதமாக தண்டனை கிடைப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், யாருடைய கால்களைப் பிடித்தாவதுதான் அந்த வாய்ப்பைப் பெற்றார்கள் எனவும் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது பேச்சுக்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் தனது விளக்கத்தை பதிவிட்டுள்ள அவர், நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் என குறிப்பிடுவதற்கு பதில், நீதிபதிகள் என தவறாக கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். நீதித்துறையின் மீதும் நீதிபதிகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் குருமூர்த்தி தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம்

நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் என குறிப்பிடுவதற்கு பதில், நீதிபதிகள் என தவறாக கூறிவிட்டதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

 நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியபோது ஒரு வார்த்தையைத் தவறாகக் கூறிவிட்டதாக விளக்கம் அளித்துள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ஊழல்வாதிகளுக்கு தாமதமாக தண்டனை கிடைப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், யாருடைய கால்களைப் பிடித்தாவதுதான் அந்த வாய்ப்பைப் பெற்றார்கள் எனவும் பேசியிருந்தார்.

image

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது பேச்சுக்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் தனது விளக்கத்தை பதிவிட்டுள்ள அவர், நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் என குறிப்பிடுவதற்கு பதில், நீதிபதிகள் என தவறாக கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். நீதித்துறையின் மீதும் நீதிபதிகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் குருமூர்த்தி தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.