ஐக்கிய அமீரகத்தில் விரைவில் பயிற்சி முகாம் - ஐபிஎல்-க்கு தயாராகும் சிஎஸ்கே..!

வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாக உள்ளது இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர். இதனை கடந்த வாரம் ஐ.பி.எல் சேர்மேன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களுக்கான பயிற்சியை அடுத்த சில நாட்களிலேயே ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வீரர்கள் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரை சிறப்பாக  விளையாட உதவும் என நம்புகிறது சி.எஸ்.கே நிர்வாகம்.  இதற்காக எம்.எஸ் தோனி உட்பட அனைத்து சென்னை அணி வீரர்களும் ஐக்கிய அமீரகத்திற்கு சென்று பயிற்சியை முன்கூட்டியே மேற்கொள்ள உள்ளனர்.  இதனை உறுதி செய்யும் வகையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று அனைத்து வீரர்களையும் சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளது சி.எஸ்.கே அணியின் நிர்வாகம். மறுநாளே சென்னை அணியின் வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரத்யேக விமானத்தில் அமீரகம் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இருந்தாலும் இதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் அவசியம் என்பதால். சி.எஸ்.கே அணி அதற்கான ஒப்புதலுக்காக தற்போது காத்துள்ளது. 

ஐக்கிய அமீரகத்தில் விரைவில் பயிற்சி முகாம் - ஐபிஎல்-க்கு தயாராகும் சிஎஸ்கே..!

வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாக உள்ளது இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர். இதனை கடந்த வாரம் ஐ.பி.எல் சேர்மேன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி செய்திருந்தார்.

image

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களுக்கான பயிற்சியை அடுத்த சில நாட்களிலேயே ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வீரர்கள் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரை சிறப்பாக  விளையாட உதவும் என நம்புகிறது சி.எஸ்.கே நிர்வாகம். 

image

இதற்காக எம்.எஸ் தோனி உட்பட அனைத்து சென்னை அணி வீரர்களும் ஐக்கிய அமீரகத்திற்கு சென்று பயிற்சியை முன்கூட்டியே மேற்கொள்ள உள்ளனர். 

இதனை உறுதி செய்யும் வகையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று அனைத்து வீரர்களையும் சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளது சி.எஸ்.கே அணியின் நிர்வாகம். மறுநாளே சென்னை அணியின் வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரத்யேக விமானத்தில் அமீரகம் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

image

இருந்தாலும் இதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் அவசியம் என்பதால். சி.எஸ்.கே அணி அதற்கான ஒப்புதலுக்காக தற்போது காத்துள்ளது.