நெருப்பு நதிபோல் காட்சியளித்த மேட்டூர் அந்திவானம் - வைரல் காட்சி

மேட்டூர் அணை அருகே நெருப்பு நதிபோல் காட்சியளித்த அந்திவானம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து இருந்தாலும் வானில் ஏற்பட்ட சில மாற்றங்கள் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக வானவில் வானத்திற்கு வளைகாப்பு நடத்தியது அற்புதமான காட்சியை வெளிப்படுத்தியுள்ளது. மேட்டூர் அணை அருகே அந்திவானம், எரிமலையில் வெடித்து சிதறிய நெருப்பு நதி போல் காட்சியளித்தது. மேட்டூர் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் சந்தோசத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தக தகத்த பூமியில் தத்தளித்த மேட்டூர் பகுதி மக்களுக்கு குளிர் பிரதேசங்களை போல் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவியது பெரும் சந்தோசத்தை கொடுத்த நிலையில் வானில் ஏற்பட்ட இந்த மாற்றங்களைக் கண்டு மேலும் பரவசம் அடைந்தனர்.

நெருப்பு நதிபோல் காட்சியளித்த மேட்டூர் அந்திவானம் - வைரல் காட்சி

மேட்டூர் அணை அருகே நெருப்பு நதிபோல் காட்சியளித்த அந்திவானம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து இருந்தாலும் வானில் ஏற்பட்ட சில மாற்றங்கள் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

image

இதில் குறிப்பாக வானவில் வானத்திற்கு வளைகாப்பு நடத்தியது அற்புதமான காட்சியை வெளிப்படுத்தியுள்ளது. மேட்டூர் அணை அருகே அந்திவானம், எரிமலையில் வெடித்து சிதறிய நெருப்பு நதி போல் காட்சியளித்தது. மேட்டூர் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் சந்தோசத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

image

தக தகத்த பூமியில் தத்தளித்த மேட்டூர் பகுதி மக்களுக்கு குளிர் பிரதேசங்களை போல் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவியது பெரும் சந்தோசத்தை கொடுத்த நிலையில் வானில் ஏற்பட்ட இந்த மாற்றங்களைக் கண்டு மேலும் பரவசம் அடைந்தனர்.