"7.5% இடஒதுக்கீடு: மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்"- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவித உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் 227 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்கள் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் ஏழை மாணவர்கள் எப்படி கல்விக்கட்டணத்தைச் செலுத்துவார்கள் என்ற விமர்சனம் எழுந்தது. ஏனெனில் தனியார் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இத்தகைய நிலையில், தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்கள். அவர்களின் மருத்துவக் கனவு அணையாது!இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும்!#DMK4TN pic.twitter.com/shJwbZBg2w — M.K.Stalin (@mkstalin) November 21, 2020 இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். திமுகவின் அறிவிப்பு ஒரு நாடகம் என்றும் முதல்வர் விமர்சித்துள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவித உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் 227 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்கள் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் ஏழை மாணவர்கள் எப்படி கல்விக்கட்டணத்தைச் செலுத்துவார்கள் என்ற விமர்சனம் எழுந்தது. ஏனெனில் தனியார் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இத்தகைய நிலையில், தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். திமுகவின் அறிவிப்பு ஒரு நாடகம் என்றும் முதல்வர் விமர்சித்துள்ளார்.