கோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து மாற்றம்

கோவைக்கு ஜனாதிபதி வருகையையொட்டி இன்று (திங்கட்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து மாற்றம்
Vehicles diverting of president's arrival

 

கோவையை அடுத்த ஈஷா யோக மையத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்க இருக்கும் மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். அவரது வருகையையொட்டி கோவையில் இருந்து சிறுவாணி ரோடு வழியாக பேரூர், மாதம்பட்டி, ஆலாந்துறை வழியாக ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் பொதுமக்கள் இன்று மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

 

மேட்டுப்பாளையம் ரோடு மார்க்கமாக வரும் வாகனங்கள் அவினாசி லிங்கம் கல்லூரி சந்திப்பு, ஜி.சி.டி, கல்லூரி சந்திப்பு, லாலி ரோடு சந்திப்பு, பி.என்.புதூர், வடவள்ளி, போளுவாம்பட்டி, தொண்டாமுத்தூர் மார்க்கமாக செல்லவேண்டும். அவினாசி ரோடு மார்க்கமாக வரும் பொதுமக்கள் அவினாசி ரோடு மேம்பாலம், புரூக் பீல்டு சாலை, கவுலிபிரவுன் ரோடு, லாலி ரோடு, வடவள்ளி மார்க்கமாகவும் செல்ல வேண்டும்.

 

பாலக்காடு ரோடு மார்க்கமாக வரும் பொதுமக்கள் கோவைப்புதூர் பிரிவு- சுண்டக்காமுத்தூர்- பச்சாபாளையம்- மாதம்பட்டி வழியாக செல்ல வேண்டும். பொள்ளாச்சி ரோடு மார்க்கமாக வரும் பொதுமக்கள் கற்பகம் கல்லூரி- எல் அண்டு டி பைபாஸ்- மதுக்கரை மார்க்கெட் ரோடு-கோவைப்புதூர் ரோடு-கோவைப்புதூர் பிரிவு-சுண்டக்காமுத்தூர்-பச்சாபாளையம்-மாதம்பட்டி வழியாகவும் செல்ல வேண்டும். இந்த தகவலை கோவை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.