'ரூ.200க்கு கோவிஷீல்டு தடுப்பூசி' - சீரம் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.200க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 16ம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் மற்றும் அனைத்து மாநில ஆளுநர்களுக்கிடையேயான ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே தடுப்பூசி குறித்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. முதற்கட்டமாக 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு சீரம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. தற்போது தடுப்பூசி விலைகுறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் ரூ.200க்கு கிடைக்கும் என தற்போது சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கோவிஷீல்டு மருந்துகளை அனுப்பும் பணி நாளை காலை முதல் தொடங்கு என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

'ரூ.200க்கு கோவிஷீல்டு தடுப்பூசி' - சீரம் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.200க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 16ம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் மற்றும் அனைத்து மாநில ஆளுநர்களுக்கிடையேயான ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே தடுப்பூசி குறித்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. முதற்கட்டமாக 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு சீரம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. தற்போது தடுப்பூசி விலைகுறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

image

அதில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் ரூ.200க்கு கிடைக்கும் என தற்போது சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கோவிஷீல்டு மருந்துகளை அனுப்பும் பணி நாளை காலை முதல் தொடங்கு என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.