ஜோ பைடன் போல பிரதமர் மோடியும் முதலில் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும்: கே.எஸ்.அழகிரி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போல, இந்திய பிரதமர் மோடியும் முதலில் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கே.எஸ்.அழகிரி “கோவிட்19 தடுப்பு ஊசியை அமெரிக்காவில் அதிபர் ஜோபைடனும், இந்தோனேசியாவில் அதிபர் ஜோகோ விடோடோவும் முதன்முதலாக அவர்களே போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை அளித்தனர். நமது பிரதமரும் அதை செய்திருக்கலாம்” என தெரிவித்திருக்கிறார்

ஜோ பைடன் போல பிரதமர் மோடியும் முதலில் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும்: கே.எஸ்.அழகிரி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போல, இந்திய பிரதமர் மோடியும் முதலில் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கே.எஸ்.அழகிரி “கோவிட்19 தடுப்பு ஊசியை அமெரிக்காவில் அதிபர் ஜோபைடனும், இந்தோனேசியாவில் அதிபர் ஜோகோ விடோடோவும் முதன்முதலாக அவர்களே போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை அளித்தனர். நமது பிரதமரும் அதை செய்திருக்கலாம்” என தெரிவித்திருக்கிறார்