'எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்' - பிரதமர் மோடி புகழாரம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், திரையுலகிலும் அரசியலிலும் மதிக்கப்பட்ட எம்ஜிஆருக்கு அவரது பிறந்த நாளில் புகழ் வணக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். முதல்வராக இருந்தபோது வறுமையை ஒழிக்கவும் மகளிருக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளை தொடங்கியவர் எம்ஜிஆர் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

'எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்' - பிரதமர் மோடி புகழாரம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், திரையுலகிலும் அரசியலிலும் மதிக்கப்பட்ட எம்ஜிஆருக்கு அவரது பிறந்த நாளில் புகழ் வணக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். முதல்வராக இருந்தபோது வறுமையை ஒழிக்கவும் மகளிருக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளை தொடங்கியவர் எம்ஜிஆர் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.