பொள்ளாச்சி : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

Man arrested for child abuse in pollachi under the pocso law and prisoned in Coimbatore cental jail

பொள்ளாச்சி : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

பொள்ளாச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து பொள்ளாச்சியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இதையடுத்து இவர் வேலை செய்யும் இடத்தில் கணவனை இழந்த பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு 14 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்லும் முத்துக்குமார் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தன் தாயாரிடம் கூறியுள்ளார்.

பின்னர் சிறுமியின் தாயார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.