இறந்துபோன 6 மாத குழந்தை - ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல வழியில்லாமல் பரிதவித்த தாய்

ராசிபுரம் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த 6 மாத குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல முடியாததால் பேருந்தில் கொண்டு செல்ல முயன்ற ஓட்டுநர்கள் ஏற்ற மறுத்ததால் குழந்தையின் தாய் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மின்னக்கல் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் (25). கட்டிட தொழிலாளியான இவருடைய  மனைவி அபிராமி (19). இவர்களுக்கு  6 மாதமே ஆன ஆண்  குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மிகவும் உடல்நிலை மோசமானதால் வெண்ணந்தூர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக  ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர். என்ன செய்வதென்று பரிதவித்த தாய் வறுமையின் காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் இறந்த குழந்தையை கொண்டு செல்ல வழியில்லாமல் கதறியபடி நின்றிருந்தார். ஆனால் பார்த்த யாருமே உதவ முன்வரவில்லை பின்னர் அருகிலிருந்த கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிந்து உடனடியாக ஆட்டோவில் இறந்த குழந்தையையும் தாயையும் அனுப்பி வைத்தார். வறுமையின் காரணமாக பேருந்து நிலையத்தில் இறந்த 6 மாத குழந்தையை கொண்டு செல்ல வழியில்லாமல் பரிதவித்த தாயின் சம்பவம் அப்பகுதியில் பார்ப்போரை சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் நீண்ட நேரமாக பார்த்த அப்பகுதி பொதுமக்கள் யாறும் உதவ முன்வராமல் இருந்தது பார்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இறந்துபோன 6 மாத குழந்தை - ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல வழியில்லாமல் பரிதவித்த தாய்

ராசிபுரம் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த 6 மாத குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல முடியாததால் பேருந்தில் கொண்டு செல்ல முயன்ற ஓட்டுநர்கள் ஏற்ற மறுத்ததால் குழந்தையின் தாய் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மின்னக்கல் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் (25). கட்டிட தொழிலாளியான இவருடைய  மனைவி அபிராமி (19). இவர்களுக்கு  6 மாதமே ஆன ஆண்  குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மிகவும் உடல்நிலை மோசமானதால் வெண்ணந்தூர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக  ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

image

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர். என்ன செய்வதென்று பரிதவித்த தாய் வறுமையின் காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் இறந்த குழந்தையை கொண்டு செல்ல வழியில்லாமல் கதறியபடி நின்றிருந்தார். ஆனால் பார்த்த யாருமே உதவ முன்வரவில்லை பின்னர் அருகிலிருந்த கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிந்து உடனடியாக ஆட்டோவில் இறந்த குழந்தையையும் தாயையும் அனுப்பி வைத்தார்.

image

வறுமையின் காரணமாக பேருந்து நிலையத்தில் இறந்த 6 மாத குழந்தையை கொண்டு செல்ல வழியில்லாமல் பரிதவித்த தாயின் சம்பவம் அப்பகுதியில் பார்ப்போரை சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் நீண்ட நேரமாக பார்த்த அப்பகுதி பொதுமக்கள் யாறும் உதவ முன்வராமல் இருந்தது பார்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.