கோலியின் ஆட்டத்திற்கு ஏன் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்... கவாஸ்கரை சாடிய அனுஷ்கா ஷர்மா

கிங்ஸ் லெவன் பஞ்சாப் உடனான லீக் ஆட்டத்தின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கிரீஸுக்கு வந்ததும் அவரது கிரிக்கெட் பயிற்சி குறித்து விமர்சித்திருந்தார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். நடப்பு ஐபிஎல் சீசனில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார் கவாஸ்கர். “ஊரடங்கின்போது கோலி அனுஷ்கா ஷர்மாவின் பவுலிங்கில் மட்டும் தான் பயிற்சி செய்துள்ளார். அந்த வீடியோவை கூட நான் பார்த்திருந்தேன். அந்த பயிற்சி மட்டும் அவருக்கு போதாது என நினைக்கிறேன்” என தெரிவித்திருந்தார் கவாஸ்கர். Finally after soo much long time saw Virat Batting ?Virat Anushka playing cricket in building today?Anushka bowls a Bouncer to Virat?#ViratKohli #AnushkaSharma #Cricket pic.twitter.com/XFmfs3hiBt — Virarsh (@Cheeku218) May 15, 2020 அவரது கருத்து கோலியின் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. ‘கவாஸ்கரை உடனடியாக வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்க வேண்டும்’ எனவும் பி.சி.சி.ஐக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் அவரது ஆட்டத்தை குறித்து நீங்கள் விமர்சிக்கலாம். இதில் ஏன் என்னை சேர்க்கிறீர்கள் என கவாஸ்கரை சாடியுள்ளார் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா.  “கவாஸ்கர் அவர்களே ஆட்டத்தை பற்றி விமர்சிக்கின்ற பணியை மட்டும் செய்யுங்கள். இதில் ஏன் என்னை இழுக்கிறீர்கள். கணவரின் ஆட்டத்திற்கு மனைவியை எப்படி குற்றவாளியாக்க முடியும். ஆட்டத்தை பற்றி விமர்சிக்கும்போது கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் அதில் இழுக்கிறீர்கள்” என பதிலடி கொடுத்துள்ளார் அனுஷ்கா ஷர்மா. 

கோலியின் ஆட்டத்திற்கு ஏன் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்... கவாஸ்கரை சாடிய அனுஷ்கா ஷர்மா

கிங்ஸ் லெவன் பஞ்சாப் உடனான லீக் ஆட்டத்தின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கிரீஸுக்கு வந்ததும் அவரது கிரிக்கெட் பயிற்சி குறித்து விமர்சித்திருந்தார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

image

நடப்பு ஐபிஎல் சீசனில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார் கவாஸ்கர்.

“ஊரடங்கின்போது கோலி அனுஷ்கா ஷர்மாவின் பவுலிங்கில் மட்டும் தான் பயிற்சி செய்துள்ளார். அந்த வீடியோவை கூட நான் பார்த்திருந்தேன். அந்த பயிற்சி மட்டும் அவருக்கு போதாது என நினைக்கிறேன்” என தெரிவித்திருந்தார் கவாஸ்கர்.

அவரது கருத்து கோலியின் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

‘கவாஸ்கரை உடனடியாக வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்க வேண்டும்’ எனவும் பி.சி.சி.ஐக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

image

இந்நிலையில் அவரது ஆட்டத்தை குறித்து நீங்கள் விமர்சிக்கலாம். இதில் ஏன் என்னை சேர்க்கிறீர்கள் என கவாஸ்கரை சாடியுள்ளார் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா. 

“கவாஸ்கர் அவர்களே ஆட்டத்தை பற்றி விமர்சிக்கின்ற பணியை மட்டும் செய்யுங்கள். இதில் ஏன் என்னை இழுக்கிறீர்கள். கணவரின் ஆட்டத்திற்கு மனைவியை எப்படி குற்றவாளியாக்க முடியும். ஆட்டத்தை பற்றி விமர்சிக்கும்போது கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் அதில் இழுக்கிறீர்கள்” என பதிலடி கொடுத்துள்ளார் அனுஷ்கா ஷர்மா.