'தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது' - பத்ரிநாத்

தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்

'தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது' - பத்ரிநாத்


தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்

முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருந்த போதிலும் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,

''பேட்டிங்கில் மிடில் ஆர்டர் வரிசையில் சரியான தேர்வு இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணம்.தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது. முடிவை எடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது. இந்திய அணிக்காக நிறைய போட்டிகளை வெற்றி வசமாக்கியவர் தோனி.தோனியின் ஓய்வு குறித்து தேர்வு குழுவின் தலைமை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அதே சமயம் விக்கெட் கீப்பருக்கான அடுத்த வீரராக ரிஷப் பந்த்க்கு அதிகமான வாய்புகள் கொடுக்கப்படுவது இளம் வீரர்களை அணியில் வரவேற்கும் விதமாக உள்ளது. இந்திய அணிக்கான கேப்டன் மாற்றம் தற்போதைக்கு தேவையில்லை. கோலி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இந்திய அளவில் வீரர்கள் தேர்வில் தமிழகம் எந்த பாரபட்சமும் இல்லாமலே நடந்து வருகிறது. திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.