குமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் வரும் 19ஆம் தேதி முதல் விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் வரும் 19ஆம் தேதி முதல் விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.