ஆதரவற்றக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் தனது 43 வது பிறந்தநாளை ஆதரவற்றக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயகுமாரின் மகனும் நடிகருமான அருண் விஜய் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக இருந்து வருகிறார். முறை மாப்பிள்ளை, பிரியம், காத்திருந்தக் காதல், துள்ளித் திரிந்த காலம், வேதா, பாண்டவர் பூமி என 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவரை மாஞ்சா வேலு, தடையறக் காக்க, என்னை அறிந்தால் குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்டப் படங்கள்தான் அவரை முன்னணி நடிகராக்கியது. எப்போதும் பிட்னஸில் விழிப்புணர்வோடு இருக்கும் அருண் விஜய் உடலை மட்டும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவில்லை. மனதையும்தான். ஆரம்பக் காலக்கட்டங்களில் தொடர் தோல்விகளைக் கொடுத்தும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இழக்காமல்  மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பவர். இந்நிலையில், இன்று தனது 43 வது பிறந்தநாளைக் ஆதரவற்றக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஆதரவற்றக் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைப் பார்த்தது எனது பிறந்தநாளுக்கு நான் விரும்பும் சிறந்த தொடக்கமாகும். இவர்களுடன் கொண்டாடியது என் இதயத்தை முழுமையாக்குகிறது. உங்கள் அருமையான வாழ்த்துகள் மற்றும் ஆசிர்வாதங்களுக்கு நன்றி” என்று ஆதரவற்றக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பர்கிந்துள்ளார்.

ஆதரவற்றக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் தனது 43 வது பிறந்தநாளை ஆதரவற்றக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயகுமாரின் மகனும் நடிகருமான அருண் விஜய் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக இருந்து வருகிறார். முறை மாப்பிள்ளை, பிரியம், காத்திருந்தக் காதல், துள்ளித் திரிந்த காலம், வேதா, பாண்டவர் பூமி என 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவரை மாஞ்சா வேலு, தடையறக் காக்க, என்னை அறிந்தால் குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்டப் படங்கள்தான் அவரை முன்னணி நடிகராக்கியது.

image

எப்போதும் பிட்னஸில் விழிப்புணர்வோடு இருக்கும் அருண் விஜய் உடலை மட்டும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவில்லை. மனதையும்தான். ஆரம்பக் காலக்கட்டங்களில் தொடர் தோல்விகளைக் கொடுத்தும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இழக்காமல்  மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பவர்.

image

இந்நிலையில், இன்று தனது 43 வது பிறந்தநாளைக் ஆதரவற்றக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஆதரவற்றக் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைப் பார்த்தது எனது பிறந்தநாளுக்கு நான் விரும்பும் சிறந்த தொடக்கமாகும். இவர்களுடன் கொண்டாடியது என் இதயத்தை முழுமையாக்குகிறது. உங்கள் அருமையான வாழ்த்துகள் மற்றும் ஆசிர்வாதங்களுக்கு நன்றி” என்று ஆதரவற்றக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பர்கிந்துள்ளார்.