பாரத் பயோடெக்கின் 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்க முடிவு - மத்திய அரசு

பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில், 16 லட்சத்து 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளது. எஞ்சிய 38 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகளை தலா 295 ரூபாய் விலைக்கு மத்திய அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக தடுப்பூசிக்கான முழுச்செலவை மத்திய அரசே ஏற்கும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

பாரத் பயோடெக்கின் 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்க முடிவு - மத்திய அரசு

பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

image

இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில், 16 லட்சத்து 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளது. எஞ்சிய 38 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகளை தலா 295 ரூபாய் விலைக்கு மத்திய அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக தடுப்பூசிக்கான முழுச்செலவை மத்திய அரசே ஏற்கும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.