பொங்கல் பண்டிகை: 5 தலைமுறைகளாக நடைபெறும் மாடு பூ தாண்டும் வினோத திருவிழா

நாமக்கல் அருகே மாடு பூ தாண்டும் வினோத திருவிழா. வெற்றி பெற்ற மாட்டுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ளது குமரிப்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஊனங்கல்பட்டி கிராமத்தில் ஆண்டு தோறும் வினோதமான மாடு பூ தாண்டும் திருவிழா நடத்தபட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் பூ தாண்டும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா சுமார் 200 ஆண்டுகளாக 5 தலைமுறைகளாக குறிப்பிட்ட சமூக மக்கள் அவர்களின் குல தெய்வ கோயிலான ஸ்ரீ வீரகாரன் சுவாமி கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட காளை மாடுகளை ஊர்மக்கள் பராமரிப்பில் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் காளைகள் பொங்கலன்று சின்னபெத்தம்பட்டி, மேலப்பட்டி, மல்லுமாச்சம்பட்டி, ஆகிய ஊர்களிலிருந்து அழைத்து வரப்படுகின்றன. இதைத் தொடர்ந்து காளைகளுக்கு பூஜை செய்து கோவில் முன் குறுக்கே போடப்பட்டிருக்கும் பூக்களால் ஆன கோடுகளை தாண்டி கோவிலை சுற்றி வரும். இதில் முதலில் வரும் மாடுகளுக்கு பரிசு வழங்குவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பூ தாண்டும் போட்டியில் சின்னபெத்தம்பட்டி ஊர் மாடு வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற காளைக்கு பரிசு வழங்கியும், மாட்டை சிறப்பாக பராமரித்தற்காக ஊர் தலைவரும் பாராட்டப்பட்டார். இவ்விழாவில் ஊனங்கல்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பொங்கல் பண்டிகை: 5 தலைமுறைகளாக நடைபெறும் மாடு பூ தாண்டும் வினோத திருவிழா

நாமக்கல் அருகே மாடு பூ தாண்டும் வினோத திருவிழா. வெற்றி பெற்ற மாட்டுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ளது குமரிப்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஊனங்கல்பட்டி கிராமத்தில் ஆண்டு தோறும் வினோதமான மாடு பூ தாண்டும் திருவிழா நடத்தபட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் பூ தாண்டும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

image


இந்த விழா சுமார் 200 ஆண்டுகளாக 5 தலைமுறைகளாக குறிப்பிட்ட சமூக மக்கள் அவர்களின் குல தெய்வ கோயிலான ஸ்ரீ வீரகாரன் சுவாமி கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட காளை மாடுகளை ஊர்மக்கள் பராமரிப்பில் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் காளைகள் பொங்கலன்று சின்னபெத்தம்பட்டி, மேலப்பட்டி, மல்லுமாச்சம்பட்டி, ஆகிய ஊர்களிலிருந்து அழைத்து வரப்படுகின்றன.


இதைத் தொடர்ந்து காளைகளுக்கு பூஜை செய்து கோவில் முன் குறுக்கே போடப்பட்டிருக்கும் பூக்களால் ஆன கோடுகளை தாண்டி கோவிலை சுற்றி வரும். இதில் முதலில் வரும் மாடுகளுக்கு பரிசு வழங்குவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பூ தாண்டும் போட்டியில் சின்னபெத்தம்பட்டி ஊர் மாடு வெற்றி பெற்றது.

image


வெற்றி பெற்ற காளைக்கு பரிசு வழங்கியும், மாட்டை சிறப்பாக பராமரித்தற்காக ஊர் தலைவரும் பாராட்டப்பட்டார். இவ்விழாவில் ஊனங்கல்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.