'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைப்பு

மாமல்லபுரம் - காரைக்கால் இடையே எதிர்வரும் 25-ம் தேதியன்று பிற்பகலில் கரையைக் கடக்கவுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள 'நிவர்' புயல் தொடர்பான அப்டேட்ஸ் இங்கே...  நவ.23,2020 | மாலை 5.10: நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 4713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு போதிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவ.23,2020 | பிற்பகல் 4.35:  'நவ.25-ல் புயல் கரையைக் கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்!' > சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, வரும் 25-ம் தேதியன்று பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். இதனால், சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் (நவ.24, 25) ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், தாஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்; மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் கரையை கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 24, 25 ஆம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் 55-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் நிலவரம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படுகிறது. 24, 25 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார். நவ.23,2020 | பிற்பகல் 4.15: மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்கள் ரத்து > புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் முழுவீச்சில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகும் நிலையில் மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நவ.23,2020 | பிற்பகல் 4.10: நிவர் புயல் முன்னேற்பாடுகள் பற்றி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் மத்திய கேபினட் செயலர் ராஜீவ் கவுபா ஆலோசனையில் ஈடுபட்டார்.  நவ.23,2020 | பிற்பகல் 01.20மணி: எங்கெல்லாம் அதீத கனமழை? நவ.23,2020 | பிற்பகல் 01.15 மணி: இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். அப்போது, நிவர் புயல், 7 பேர் விடுதலை, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. > முழு விவரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி  நவ.23,2020 | பிற்பகல் 01.00 மணி: தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. > முழு விவரம்: அதி தீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்': எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா? நவ.23,2020 | பிற்பகல் 12.30 மணி: நிவர் புயலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அமைச்சகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். நவ.23,2020 | காலை 11.40 மணி: தமிழகத்தை நிவர் புயல் நெருங்கும் சூழலில், தயார் நிலை குறித்து முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்துகிறார். நவ.23,2020 | காலை 11.30 மணி: புயல் கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கை ஏற்பாடாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். > முழு விவரம்: "புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்"-அமைச்சர் தங்கமணி   நவ.23,2020 | காலை 10.30 மணி:கஜா புயலை போல நிவர் புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். > முழு விவரம்: ‘கஜா‘ புயலைபோல ‘நிவர்‘  பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது: ஜெயக்குமார்    நவ.23,2020 | காலை 10.05 மணி: சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 25 ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. > முழு விவரம்: ‘நிவர்’ தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை    > 'நிவர்' புயல் காரணமாக மக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாப்புக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் முழு விவரம் > “நிவர் புயல் - இதையெல்லாம் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்”- பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தல்   

'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைப்பு

மாமல்லபுரம் - காரைக்கால் இடையே எதிர்வரும் 25-ம் தேதியன்று பிற்பகலில் கரையைக் கடக்கவுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள 'நிவர்' புயல் தொடர்பான அப்டேட்ஸ் இங்கே... 

நவ.23,2020 | மாலை 5.10: நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 4713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு போதிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவ.23,2020 | பிற்பகல் 4.35:  'நவ.25-ல் புயல் கரையைக் கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்!' > சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, வரும் 25-ம் தேதியன்று பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். இதனால், சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் (நவ.24, 25) ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், தாஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.

ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்; மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் கரையை கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 24, 25 ஆம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் 55-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புயல் நிலவரம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படுகிறது. 24, 25 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.

நவ.23,2020 | பிற்பகல் 4.15: மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்கள் ரத்து > புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் முழுவீச்சில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகும் நிலையில் மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவ.23,2020 | பிற்பகல் 4.10: நிவர் புயல் முன்னேற்பாடுகள் பற்றி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் மத்திய கேபினட் செயலர் ராஜீவ் கவுபா ஆலோசனையில் ஈடுபட்டார். 

நவ.23,2020 | பிற்பகல் 01.20மணி: எங்கெல்லாம் அதீத கனமழை?

image

நவ.23,2020 | பிற்பகல் 01.15 மணி: இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். அப்போது, நிவர் புயல், 7 பேர் விடுதலை, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. > முழு விவரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி 

நவ.23,2020 | பிற்பகல் 01.00 மணி: தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. > முழு விவரம்: அதி தீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்': எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா?

நவ.23,2020 | பிற்பகல் 12.30 மணி: நிவர் புயலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அமைச்சகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நவ.23,2020 | காலை 11.40 மணி: தமிழகத்தை நிவர் புயல் நெருங்கும் சூழலில், தயார் நிலை குறித்து முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்துகிறார்.

image

நவ.23,2020 | காலை 11.30 மணி: புயல் கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கை ஏற்பாடாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். > முழு விவரம்: "புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்"-அமைச்சர் தங்கமணி

 

நவ.23,2020 | காலை 10.30 மணி:கஜா புயலை போல நிவர் புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். > முழு விவரம்: ‘கஜா‘ புயலைபோல ‘நிவர்‘  பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது: ஜெயக்குமார் 

 

image

நவ.23,2020 | காலை 10.05 மணி: சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 25 ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. > முழு விவரம்: ‘நிவர்’ தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

image

 

> 'நிவர்' புயல் காரணமாக மக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாப்புக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் முழு விவரம் > “நிவர் புயல் - இதையெல்லாம் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்”- பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தல்