சமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த அதிதி ராவ்..!

நடிகை சமந்தா குறித்த வதந்தி செய்திக்கு நடிகை அதிதி ராவ் காட்டமாக ஒரு பதிலை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘96’. இந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் ட்ரெண்ட் செட்டர் படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக அமைந்துவிட்டதாக திரை விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தனர். தமிழில் வெற்றியடைந்ததை அடுத்து இப்படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் இந்தப் படத்திற்கு தமிழில் கிடைத்த அளவுக்கு வரவேற்பு தெலுங்கில் கிடைக்கவில்லை. த்ரிஷா வேடத்தில் சமந்தா தெலுங்கில் நடித்திருந்தார். ஆனால் அவரது நடிப்பிற்கு இருவேறு விதமான கருத்துகள் கிடைத்தன. இந்நிலையில் இந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு சமந்தா நடிக்க இருந்த ‘மகா சமுத்திரம்’ படத்தில் அவருக்குப் பதிலாக அதிதி ராவ் ஹைதரியை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த அதிதி ராவ், “இது உண்மையிலேயே முக்கியமானது என நான் கருதுகிறேன். ‘அண்ணாத்த’- இது ரஜினியின் அடுத்த மிரட்டல்..! ஒரு வெற்றியால் அல்லது தோல்வியால் ஒரு நடிகரின் நம்பகத்தன்மையை பறிக்க முடியாது. ஆகவே இந்த வகையான சிந்தனையை ஊக்குவிக்க வேண்டாம்”என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்றும் கூறியிருந்தார். இந்தப் பதிவின் மூலம் அவர் மறைமுகமாக சமந்தாவை ஆதரித்தும் வதந்தி செய்திகளை எதிர்த்தும் கருத்து கூறியிருந்ததால், ரசிகர்கள் பலரும் அந்த ட்வீட்டை பகிர்ந்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘சைக்கோ’ படத்தில் அதிதி ராவ் நடித்திருந்தார். அதேபோல் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

சமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த அதிதி ராவ்..!

நடிகை சமந்தா குறித்த வதந்தி செய்திக்கு நடிகை அதிதி ராவ் காட்டமாக ஒரு பதிலை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘96’. இந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் ட்ரெண்ட் செட்டர் படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக அமைந்துவிட்டதாக திரை விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தனர். தமிழில் வெற்றியடைந்ததை அடுத்து இப்படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

image

ஆனால் இந்தப் படத்திற்கு தமிழில் கிடைத்த அளவுக்கு வரவேற்பு தெலுங்கில் கிடைக்கவில்லை. த்ரிஷா வேடத்தில் சமந்தா தெலுங்கில் நடித்திருந்தார். ஆனால் அவரது நடிப்பிற்கு இருவேறு விதமான கருத்துகள் கிடைத்தன.

இந்நிலையில் இந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு சமந்தா நடிக்க இருந்த ‘மகா சமுத்திரம்’ படத்தில் அவருக்குப் பதிலாக அதிதி ராவ் ஹைதரியை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த அதிதி ராவ், “இது உண்மையிலேயே முக்கியமானது என நான் கருதுகிறேன்.

‘அண்ணாத்த’- இது ரஜினியின் அடுத்த மிரட்டல்..!

ஒரு வெற்றியால் அல்லது தோல்வியால் ஒரு நடிகரின் நம்பகத்தன்மையை பறிக்க முடியாது. ஆகவே இந்த வகையான சிந்தனையை ஊக்குவிக்க வேண்டாம்”என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்றும் கூறியிருந்தார். இந்தப் பதிவின் மூலம் அவர் மறைமுகமாக சமந்தாவை ஆதரித்தும் வதந்தி செய்திகளை எதிர்த்தும் கருத்து கூறியிருந்ததால், ரசிகர்கள் பலரும் அந்த ட்வீட்டை பகிர்ந்துள்ளனர்.

image

சமீபத்தில் வெளியான ‘சைக்கோ’ படத்தில் அதிதி ராவ் நடித்திருந்தார். அதேபோல் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.