அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருதுகள்: டிசம்பர் 14 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் வழங்கப்படும் வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் மற்றும் சமூக நல்லிணகத்துக்கான கபீர் புரஸ்கார் ஆகிய விருதுகளுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பொதுத்துறைச் செயலாளர் ப. செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வீரதீரச் செயல்களுக்கான இந்த விருதுகள் வழங்கப்படும். அண்ணா பதக்கத்துடன் ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை வழங்கப்படும். பொதுமக்களில் 3 பேருக்கும், அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் வழங்கப்படும்.தமிழகத்தைச் சேர்ந்த வீரதீர செயல் புரிந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...! கோப்புப் படம்  கபீர் புரஸ்கார் விருதுக்கு தமிழகத்தில் வசிக்கும் ஆயுதப்படை காவல், தீயணைப்புத் துறையினர், அரசுப் பணியாளர்கள் நீங்கலாக அனைத்து இந்திய குடிமக்களும் விண்ணப்பிக்கலாம்.. மூன்று அளவீடுகளில் தலா ஒருவர் வீதம் மூன்று பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ, அரசுச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலாளர், சென்னை - 9 என்ற முகவரிக்கு டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பிவைக்கவேண்டும். சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம் 

அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருதுகள்: டிசம்பர் 14 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் வழங்கப்படும் வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் மற்றும் சமூக நல்லிணகத்துக்கான கபீர் புரஸ்கார் ஆகிய விருதுகளுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பொதுத்துறைச் செயலாளர் ப. செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வீரதீரச் செயல்களுக்கான இந்த விருதுகள் வழங்கப்படும். அண்ணா பதக்கத்துடன் ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை வழங்கப்படும். பொதுமக்களில் 3 பேருக்கும், அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் வழங்கப்படும்.தமிழகத்தைச் சேர்ந்த வீரதீர செயல் புரிந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...!

image

கோப்புப் படம் 

கபீர் புரஸ்கார் விருதுக்கு தமிழகத்தில் வசிக்கும் ஆயுதப்படை காவல், தீயணைப்புத் துறையினர், அரசுப் பணியாளர்கள் நீங்கலாக அனைத்து இந்திய குடிமக்களும் விண்ணப்பிக்கலாம்.. மூன்று அளவீடுகளில் தலா ஒருவர் வீதம் மூன்று பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ, அரசுச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலாளர், சென்னை - 9 என்ற முகவரிக்கு டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பிவைக்கவேண்டும்.

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்