அடுத்து சென்னை.. அதன்பின் வட இந்தியா.. ரஜினியின் ‘அண்ணாத்த’ அப்டேட்..!

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 168-வது திரைப்படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘அண்ணாத்த’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இமான் இசைமைக்கிறார். சென்டிமெண்ட் காட்சிகளுடன் குடும்பங்களுக்கான திரைப்படங்களை கொடுக்கும் சிவா, அதே பாணியில் இந்த திரைப்படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்டிமெண்ட், குடும்பக்கதை என கமர்சியல் படம் என்பதால் நடிகர் ரஜினிகாந்தும் உற்சாகத்துடன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் மார்ச் தொடக்கத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் புனே - கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புனே-கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இடங்கள் குறித்து படக்குழு இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுக்கிறது அரசு’ - பாடகர் ஸ்ரீநிவாஸ் வருத்தம்

அடுத்து சென்னை.. அதன்பின் வட இந்தியா.. ரஜினியின் ‘அண்ணாத்த’ அப்டேட்..!

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 168-வது திரைப்படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘அண்ணாத்த’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இமான் இசைமைக்கிறார்.

image

சென்டிமெண்ட் காட்சிகளுடன் குடும்பங்களுக்கான திரைப்படங்களை கொடுக்கும் சிவா, அதே பாணியில் இந்த திரைப்படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்டிமெண்ட், குடும்பக்கதை என கமர்சியல் படம் என்பதால் நடிகர் ரஜினிகாந்தும் உற்சாகத்துடன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் மார்ச் தொடக்கத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

மேலும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் புனே - கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புனே-கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இடங்கள் குறித்து படக்குழு இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுக்கிறது அரசு’ - பாடகர் ஸ்ரீநிவாஸ் வருத்தம்