தமிழகத்தில் அமித் ஷா Live Updates: மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல்

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கியத் தலைவருமான அமித் ஷாவின் தமிழக வருகையையொட்டிய லைவ் அப்டேட்ஸ் இங்கே... நவ.21,2020 | பிற்பகல் 5.10 மணி: கோவை - அவிநாசி சாலையில் ரூ. 1,620 கோடியில் உயர்மட்ட சாலைத் திட்டத்திற்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். கரூர் நஞ்சை புகலூரில் ரூ. 406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.  நவ.21,2020 | பிற்பகல் 5.05 மணி: முதலில் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்கத்தை அமித் ஷா அர்ப்பணித்தார். ரூ.61,843 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். நவ.21,2020 | பிற்பகல் 4.50 மணி: கலைவாணர் அரங்கத்திற்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். குத்துவிளக்கு ஏற்றிய அமித் ஷாவுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய முதல்வர் பழனிசாமி விநாயகர் சிலையையும், துணை முதல்வர் நடராஜன் சிலையையும் பரிசாகக் கொடுத்தனர். முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் துணைமுதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், வாரியத் தலைவர்கள், அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நவ.21,2020 | பிற்பகல் 4.35 மணி: சென்னையில் அமித் ஷா - நோக்கம் என்ன? காரசார விவாதம்  நவ.21,2020 | பிற்பகல் 4.25 மணி: அமித் ஷா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது; மத்திய அமைச்சராக வருவது அவரது உரிமை. கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்கு திமுக இன்னும் வரவில்லை என வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். முதல்வரை பாஜகதான் தீர்மானிக்குமென வானதி சீனிவாசன் கூறியதுபற்றி முதல்வர்தான் பதிலளிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நவ.21,2020 | பிற்பகல் 3.59 மணி: இன்று மாலை 4.30 மணிக்கு அரசு விழாவில் அமித் ஷா பங்கேற்கவுள்ள நிலையில், தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் அமைச்சர் ஜெயக்குமார் அமிஷ் ஷாவை சந்தித்துள்ளார்.   நவ.21,2020 | பிற்பகல் 3.42 மணி: ''சென்னை வந்தடைந்தேன், தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!'' என்று அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார். சென்னை வந்தடைந்தேன்!தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்! pic.twitter.com/SIyGePTc9W — Amit Shah (@AmitShah) November 21, 2020 நவ.21,2020 | பிற்பகல் 3.25 மணி: தமிழகத்தில் அமித் ஷா வருகை தந்துள்ள நிலையில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக்கில் தற்போதைய நிலவரப்படி, ஏறத்தாழ 4 லட்சம் பதிவுகள் ட்வீட்டாக இடப்பட்டுள்ளன. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.  நவ.21,2020 | பிற்பகல் 3.18 மணி: அமித் ஷா வருகை யாருக்கு பயம்? - சிறப்பு விவாதம் வீடியோ இங்கே... நவ.21,2020 | பிற்பகல் 3.05 மணி: சென்னையில் தொண்டர்களை நோக்கி கையசைத்து சென்ற அமித் ஷாவை நோக்கி பதாகை வீசிய நபரை போலீஸார் கைதுசெய்து அவரிடன் விசாரணை நடத்தினர். பதாகை வீசியதாக கைது செய்யப்பட்ட துரைராஜ் மனநலம் குன்றியவர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. நவ.21,2020 | பிற்பகல் 2.45 மணி: அமித் ஷா வருகையால் சென்னை கிண்டி, திரிசூலம், மீனம்பாக்கம், ஈக்காடுதாங்கல், அசோக் நகர் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அமித் ஷா வருகை : சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்#AmitShah | #AmitShahTNVisit | #ChennaiTraffic pic.twitter.com/a9FbwFTiiA — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 21, 2020 நவ.21,2020 | பிற்பகல் 2.35 மணி:  உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்தடைந்தார். முன்னதாக  சாலையில் நடந்துசென்ற அமித்ஷா மீது சாலை ஓரம் நின்ற ஒருவர் பதாகையை வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    விரிவாக படிக்க> அமித் ஷா மீது பதாகை வீச முயற்சி - நடைபயணத்தில் பரபரப்பு    நவ.21,2020 | பிற்பகல் 2.30 மணி  சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்தடைந்தார்.     நவ.21,2020 | பிற்பகல் 2.17மணி   சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு  பாஜக, அதிமுக தொண்டர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.    நவ.21,2020 | பிற்பகல் 2.05 மணி விமான நிலையத்திலிருந்து வெளியேறிய அமித் ஷா  திடீரென்று  காரை பாதியில் நிறுத்தி நடைபயணம் செய்தார். சாலையில் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமாக கையசைத்து வரவேற்பு அளித்தனர். நவ.21,2020 | பிற்பகல் 2.00 மணி:  சென்னை விமான நிலையம் வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.   நவ.21,2020 | பிற்பகல் 1.52 மணி: சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா   நவ.21,2020 | பிற்பகல் 1.40 மணி: அமித் ஷாவை வரவேற்க சென்னை விமான நிலையம் பகுதியில் பாஜக, அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.   நவ.21,2020 | பிற்பகல் 1.10 மணி: மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கியத் தலைவருமான அமித் ஷாவை வரவேற்க, சென்னை விமான நிலையம் பகுதியில் பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

தமிழகத்தில் அமித் ஷா Live Updates: மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல்

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கியத் தலைவருமான அமித் ஷாவின் தமிழக வருகையையொட்டிய லைவ் அப்டேட்ஸ் இங்கே...

நவ.21,2020 | பிற்பகல் 5.10 மணி: கோவை - அவிநாசி சாலையில் ரூ. 1,620 கோடியில் உயர்மட்ட சாலைத் திட்டத்திற்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். கரூர் நஞ்சை புகலூரில் ரூ. 406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

நவ.21,2020 | பிற்பகல் 5.05 மணி: முதலில் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்கத்தை அமித் ஷா அர்ப்பணித்தார். ரூ.61,843 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

நவ.21,2020 | பிற்பகல் 4.50 மணி: கலைவாணர் அரங்கத்திற்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். குத்துவிளக்கு ஏற்றிய அமித் ஷாவுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய முதல்வர் பழனிசாமி விநாயகர் சிலையையும், துணை முதல்வர் நடராஜன் சிலையையும் பரிசாகக் கொடுத்தனர். முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் துணைமுதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், வாரியத் தலைவர்கள், அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

image

நவ.21,2020 | பிற்பகல் 4.35 மணி: சென்னையில் அமித் ஷா - நோக்கம் என்ன? காரசார விவாதம் 

நவ.21,2020 | பிற்பகல் 4.25 மணி: அமித் ஷா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது; மத்திய அமைச்சராக வருவது அவரது உரிமை. கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்கு திமுக இன்னும் வரவில்லை என வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். முதல்வரை பாஜகதான் தீர்மானிக்குமென வானதி சீனிவாசன் கூறியதுபற்றி முதல்வர்தான் பதிலளிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நவ.21,2020 | பிற்பகல் 3.59 மணி: இன்று மாலை 4.30 மணிக்கு அரசு விழாவில் அமித் ஷா பங்கேற்கவுள்ள நிலையில், தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் அமைச்சர் ஜெயக்குமார் அமிஷ் ஷாவை சந்தித்துள்ளார்.

image

 

நவ.21,2020 | பிற்பகல் 3.42 மணி: ''சென்னை வந்தடைந்தேன், தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!'' என்று அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

நவ.21,2020 | பிற்பகல் 3.25 மணி: தமிழகத்தில் அமித் ஷா வருகை தந்துள்ள நிலையில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக்கில் தற்போதைய நிலவரப்படி, ஏறத்தாழ 4 லட்சம் பதிவுகள் ட்வீட்டாக இடப்பட்டுள்ளன. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

நவ.21,2020 | பிற்பகல் 3.18 மணி: அமித் ஷா வருகை யாருக்கு பயம்? - சிறப்பு விவாதம் வீடியோ இங்கே...

நவ.21,2020 | பிற்பகல் 3.05 மணி: சென்னையில் தொண்டர்களை நோக்கி கையசைத்து சென்ற அமித் ஷாவை நோக்கி பதாகை வீசிய நபரை போலீஸார் கைதுசெய்து அவரிடன் விசாரணை நடத்தினர். பதாகை வீசியதாக கைது செய்யப்பட்ட துரைராஜ் மனநலம் குன்றியவர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நவ.21,2020 | பிற்பகல் 2.45 மணி: அமித் ஷா வருகையால் சென்னை கிண்டி, திரிசூலம், மீனம்பாக்கம், ஈக்காடுதாங்கல், அசோக் நகர் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நவ.21,2020 | பிற்பகல் 2.35 மணி:  உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்தடைந்தார். முன்னதாக  சாலையில் நடந்துசென்ற அமித்ஷா மீது சாலை ஓரம் நின்ற ஒருவர் பதாகையை வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 image

 நவ.21,2020 | பிற்பகல் 2.30 மணி  சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்தடைந்தார். 

image

 

 நவ.21,2020 | பிற்பகல் 2.17மணி   சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு  பாஜக, அதிமுக தொண்டர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

image

 நவ.21,2020 | பிற்பகல் 2.05 மணி விமான நிலையத்திலிருந்து வெளியேறிய அமித் ஷா  திடீரென்று  காரை பாதியில் நிறுத்தி நடைபயணம் செய்தார். சாலையில் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமாக கையசைத்து வரவேற்பு அளித்தனர்.

image

நவ.21,2020 | பிற்பகல் 2.00 மணி:  சென்னை விமான நிலையம் வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

 

நவ.21,2020 | பிற்பகல் 1.52 மணி:

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

 

நவ.21,2020 | பிற்பகல் 1.40 மணி:

அமித் ஷாவை வரவேற்க சென்னை விமான நிலையம் பகுதியில் பாஜக, அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

 

நவ.21,2020 | பிற்பகல் 1.10 மணி:

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கியத் தலைவருமான அமித் ஷாவை வரவேற்க, சென்னை விமான நிலையம் பகுதியில் பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கள நிலவரம் லைவ் வீடியோ வடிவில்... | செய்தியாளர்: ரமேஷ்

தொடர்புடைய முக்கியச் செய்திகள்:

> மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகையை எதிர்த்தும் ஆதரித்தும் சமூக வலைதள ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக் யுத்தம் நடந்து வருகிறது. > விரிவான செய்தி: அமித் ஷாவின் தமிழக வருகையை எதிர்த்தும் ஆதரித்தும் 'ஹேஷ்டேக் யுத்தம்'! 

> முக்கியத் தலைவர்களை சந்திக்கும் அமித் ஷா? பயணத்திட்டம் என்ன? 

> தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். > சற்றே விரிவான செய்தி: அமித் ஷா இன்று தமிழகம் வருகை! - தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை? 

image