ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்! முழு வீச்சில் இறுதிக்கட்ட பணிகள்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் மாறியுள்ள நடிகர் ஜெய்யின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருகிறது. இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் படத்தின் பெயர் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று வைக்கப்பட்டுள்ளது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர உள்ள நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது.  விஜய்யின் பகவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய், சென்னை 28, வாமனன், சுப்ரமணியபுரம், வடகறி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு ’தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் வெளியானது. சில வருடங்கள் படங்கள் நடிக்காமல் இருந்த ஜெய் மீண்டும் நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது...   படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற,  தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யுடன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் மிக அற்புதமாக இருந்தது. அவரது ஒத்துழைப்பும் படத்தின் மீதான அவரது ஈடுபாடும் அபாரமானதாக இருந்தது. படத்தின் துவக்க நாள் முதலாக, படத்தின் மீது பெரும் ஈடுபாட்டுடன், மிக கடினமான கதாப்பாத்திரத்தை முழுதாக உள்வாங்கி,  தனது மிகச்சிறந்த நடிப்பை முழு மூச்சுடன் வழங்கினார். படத்தின் புட்டேஜ்களை எடிட் செய்தபோது நடிகர் ஜெய்யுடைய நடிப்பை கண்டு பிரமித்து போனேன். இப்படம் அவரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்திற்கு அழைத்து செல்லும். என்னை முழுதாக நம்பி இப்படத்திற்கு பெரிய பட்ஜெட்டை தந்த தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இத்திரைப்படம் பெரும் உற்சாகத்தையும் அதே நேரம் படத்தை தரமான படைப்பாக ரசிகர்களுக்கு அளிக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வையும் அளித்துள்ளது. இப்படத்தின் பெரும் பகுதி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் கொண்டதாக  உள்ளது.  அதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் 450 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.  இப்படத்தில் நடிகை பானுஶ்ரீ நாயகியாக நடிக்கிறார். ( மகதீரா, விஜய்யின் சுறா படப்புகழ் ) தேவ் கில், ( வேதாளம் புகழ் ) ராகுல் தேவ் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். திருகடல் உதயம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்! முழு வீச்சில் இறுதிக்கட்ட பணிகள்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் மாறியுள்ள நடிகர் ஜெய்யின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருகிறது. இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் படத்தின் பெயர் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று வைக்கப்பட்டுள்ளது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர உள்ள நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது. 

விஜய்யின் பகவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய், சென்னை 28, வாமனன், சுப்ரமணியபுரம், வடகறி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு ’தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் வெளியானது. சில வருடங்கள் படங்கள் நடிக்காமல் இருந்த ஜெய் மீண்டும் நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

image

இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது... 

 படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற,  தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யுடன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் மிக அற்புதமாக இருந்தது. அவரது ஒத்துழைப்பும் படத்தின் மீதான அவரது ஈடுபாடும் அபாரமானதாக இருந்தது. படத்தின் துவக்க நாள் முதலாக, படத்தின் மீது பெரும் ஈடுபாட்டுடன், மிக கடினமான கதாப்பாத்திரத்தை முழுதாக உள்வாங்கி,  தனது மிகச்சிறந்த நடிப்பை முழு மூச்சுடன் வழங்கினார்.

image

படத்தின் புட்டேஜ்களை எடிட் செய்தபோது நடிகர் ஜெய்யுடைய நடிப்பை கண்டு பிரமித்து போனேன். இப்படம் அவரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்திற்கு அழைத்து செல்லும். என்னை முழுதாக நம்பி இப்படத்திற்கு பெரிய பட்ஜெட்டை தந்த தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

image

இத்திரைப்படம் பெரும் உற்சாகத்தையும் அதே நேரம் படத்தை தரமான படைப்பாக ரசிகர்களுக்கு அளிக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வையும் அளித்துள்ளது. இப்படத்தின் பெரும் பகுதி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் கொண்டதாக  உள்ளது.  அதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் 450 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 

இப்படத்தில் நடிகை பானுஶ்ரீ நாயகியாக நடிக்கிறார். ( மகதீரா, விஜய்யின் சுறா படப்புகழ் ) தேவ் கில், ( வேதாளம் புகழ் ) ராகுல் தேவ் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். திருகடல் உதயம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.