Supporting farmers in corono curfew | farmers product

ஊரடங்கு காரணமாக விளைப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமல் விளை நிலங்களில் வீணாகும் நிலை உருவாகியுள்ளது

Supporting farmers in corono curfew | farmers product
Supporting farmers in corono curfew | farmers product
Supporting farmers in corono curfew | farmers product

ஊரடங்கு காரணமாக விளைப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமல் விளை நிலங்களில் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தவிர்க்க, அறுவடைக்கு தயாராக உள்ள விளைப் பொருட்களை சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து, நமது குமரகுரு கல்வி நிறுவனம் நேரடியாக மொத்த கொள்முதல் பணியை துவங்கியுள்ளது. இவற்றை தேவையுள்ளவர்களுக்கும், சமுதாய சமையல் கூடத்திற்கும், பொது மக்களுக்கும் விநியோகிக்க உள்ளோம்.

முதல் படியாக, சத்தியமங்கலம் விவசாயிகளிடம் இருந்து 3000 கிலோ முட்டைக்கோஸ் இன்று கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் கொள்முதல் விலை (போக்குவரத்து செலவு உட்பட) கிலோ ₹ 8 என்ற அடக்க விலையில் நேரடியாக மக்களுக்கு வழங்கிடவுள்ளோம்.

கோவையைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர் என தேவை இருப்பவர்கள் மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம். 23.04.2020 முதல் விநியோகம் துவங்கியுள்ளது  
குமரகுரு நிறுவனத்துடன், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு குழுவின் தன்னார்வலர்களும் இணைந்து செயல்படுகின்றனர். விளைப் பொருட்கள் தேவைப்படுவோர்கள், கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு,
நேதாஜிசுபாஷ் - 97879 44794