அக்டோபர் 15-ல் வெளியாகும் டாப்ஸியின் ‘ராஷ்மி ராக்கெட்’

நடிகை டாப்ஸி நடித்துள்ள ’ராஷ்மி ராக்கெட்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. இந்தியாவின் முன்னணி நடிகையான டாப்ஸி நடிப்பில் ‘ராஷ்மி ராக்கெட்’, ‘லூப் லாபேடா’, ‘டோபாரா’, ‘சபாஷ் மிது’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சபாஷ் மிது’ இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது. நடித்துக்கொண்டே தான் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆனதையொட்டி ’அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார் டாப்ஸி. இந்த நிலையில், அவர் நடித்துள்ள ’ராஷ்மி ராக்கெட்’ திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அகர்ஷ் குரானா இயக்கியுள்ள இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 15-ல் வெளியாகும் டாப்ஸியின் ‘ராஷ்மி ராக்கெட்’
Web Designing Company in Coimbatore - Creativepoint

நடிகை டாப்ஸி நடித்துள்ள ’ராஷ்மி ராக்கெட்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

இந்தியாவின் முன்னணி நடிகையான டாப்ஸி நடிப்பில் ‘ராஷ்மி ராக்கெட்’, ‘லூப் லாபேடா’, ‘டோபாரா’, ‘சபாஷ் மிது’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சபாஷ் மிது’ இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது. நடித்துக்கொண்டே தான் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆனதையொட்டி ’அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார் டாப்ஸி.

image

இந்த நிலையில், அவர் நடித்துள்ள ’ராஷ்மி ராக்கெட்’ திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அகர்ஷ் குரானா இயக்கியுள்ள இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.