மதுரையிலேயே மல்லிப் பூ கிடைக்கவில்லை - கொட்டும் மழையில் வாங்க வந்த மக்கள் ஏமாற்றம்

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக சுமார் 90 டன்  பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக பூக்களின் வரத்து 30 முதல் 40 டன்னாக குறைந்துள்ளது.  இதனிடையே  தை பொங்கல், மாட்டுப்பொங்கல் உள்ளிட்ட விழாக்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 