மருத்துவமனையில் முத்துமணி அனுமதி: நலம் விசாரித்த ரஜினி

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகராக புகழ்பெறத் துவங்கியபோதே ரஜினிக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் என்ற பெருமையை பெற்றவர் மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஏ.பி முத்துமணி. இவர் நுரையீரல் தொற்றுக் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துக் கேள்விப்பட்ட ரஜினி முத்துமணிக்கு போன் செய்து நலம் விசாரித்ததோடு, அவரது மனைவிக்கும் ஆறுதல் சொல்லியுள்ளார். அதோடு, நிச்சயமாக முத்துமணி விரைவில் குணமாகி வருவர கடவுளை வேண்டிக்கொள்கிறேன்’ என்றும் கூறியுள்ளார். இதனை, ரஜினியின் பி.ஆர்.ஓ ரியாஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் முத்துமணி அனுமதி: நலம் விசாரித்த ரஜினி

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகராக புகழ்பெறத் துவங்கியபோதே ரஜினிக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் என்ற பெருமையை பெற்றவர் மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஏ.பி முத்துமணி.

image

இவர் நுரையீரல் தொற்றுக் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துக் கேள்விப்பட்ட ரஜினி முத்துமணிக்கு போன் செய்து நலம் விசாரித்ததோடு, அவரது மனைவிக்கும் ஆறுதல் சொல்லியுள்ளார். அதோடு, நிச்சயமாக முத்துமணி விரைவில் குணமாகி வருவர கடவுளை வேண்டிக்கொள்கிறேன்’ என்றும் கூறியுள்ளார். இதனை, ரஜினியின் பி.ஆர்.ஓ ரியாஸ் அஹமது தெரிவித்துள்ளார்.