ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்கிறது: புதின்

ரஷ்யா விரைவில் இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசியை பதிவு செய்யும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். ரஷ்யாவின் சுகாதார அமைப்பு "இப்போது COVID-19 ஐ திறம்பட எதிர்கொள்ள தயாராக உள்ளது" என்று ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். வெக்டர் மையத்தின் கோவிட் -19 தடுப்பூசி 'எபிவாகொரோனா' பதிவை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்போவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் கூறியதை அடுத்து இந்த தகவல் வெளிவந்துள்ளது. “இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மனித உயிர்களின் மதிப்பினை உணர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையும், கொரோனா முன்கள பணியாளர்களும் தங்களின் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்போது நம் நாடு கோரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் உள்ளது” என்று புதின் கூறினார். ரஷ்யா ஏற்கெனவே கடந்த ஆகஸ்டு மாதம் தனது முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, இந்தியா, பிரேசிலுக்கு அடுத்ததாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 4ஆம் இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் இதுவரை 1,117,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 19,720 பேர் கோரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்கிறது: புதின்

ரஷ்யா விரைவில் இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசியை பதிவு செய்யும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

image

ரஷ்யாவின் சுகாதார அமைப்பு "இப்போது COVID-19 ஐ திறம்பட எதிர்கொள்ள தயாராக உள்ளது" என்று ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். வெக்டர் மையத்தின் கோவிட் -19 தடுப்பூசி 'எபிவாகொரோனா' பதிவை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்போவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் கூறியதை அடுத்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

“இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மனித உயிர்களின் மதிப்பினை உணர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையும், கொரோனா முன்கள பணியாளர்களும் தங்களின் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்போது நம் நாடு கோரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் உள்ளது” என்று புதின் கூறினார்.

ரஷ்யா ஏற்கெனவே கடந்த ஆகஸ்டு மாதம் தனது முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, இந்தியா, பிரேசிலுக்கு அடுத்ததாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 4ஆம் இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் இதுவரை 1,117,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 19,720 பேர் கோரோனாவால் உயிரிழந்துள்ளனர்.