ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: ரஷ்யா

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றிருப்பதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே மக்களை அச்சுறுத்திவருகிறது. சுமார் 59.2 மில்லியன் மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டதில், 37.9 மில்லியன் மக்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 1.4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. அதில் பல மருந்துகள் 90-லிருந்து 90% வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்திருந்ததன. அதில் ஒன்றாக, 3ஆம் கட்ட சோதனையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92% பலனளிக்கக்கூடியது என ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும், ஏற்கெனவே அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு ஆகியவற்றின் தடுப்பு மருந்து 95% வரை வெற்றிபெற்றுள்ள நிலையில். தற்போது ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தும் 95% வெற்றிபெற்றுள்ளதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.  

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: ரஷ்யா

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றிருப்பதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே மக்களை அச்சுறுத்திவருகிறது. சுமார் 59.2 மில்லியன் மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டதில், 37.9 மில்லியன் மக்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 1.4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. அதில் பல மருந்துகள் 90-லிருந்து 90% வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்திருந்ததன. அதில் ஒன்றாக, 3ஆம் கட்ட சோதனையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92% பலனளிக்கக்கூடியது என ஏற்கெனவே அறிவித்திருந்தது.

மேலும், ஏற்கெனவே அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு ஆகியவற்றின் தடுப்பு மருந்து 95% வரை வெற்றிபெற்றுள்ள நிலையில். தற்போது ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தும் 95% வெற்றிபெற்றுள்ளதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.